• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-14 14:18:56    
நேயர் நேரம்42

cri
தமிழ் மூல சீனம் நிகழ்ச்சி பகுதியில் பழைய பாடத்தை மீண்டும் ஒலிபரப்பிய விதம் அருமை. கடந்த பாடத்தை மீண்டும் தெளிவாக கேட்டு அறிந்துக் கொள்ள இது எங்களுக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டேம் அருமையாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார். தமிழ்ச் செல்வம் அவர்களுக்கும் சீன வானொலி நிலையத்திற்கும் நன்றிகள் என்றும். நேயர் விருப்பம் பகுதியில் பல கருத்து மிக்க பாடல்களாக வந்தது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது விரும்பி கேட்ட பாண்டலமங்கலம் தியாகராஜன் குழுவிற்கு நன்றி சிறப்பாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார். மேடம் கலைமகள் அவர்களுக்கும் சீனா வானொலி நிலையத்திற்கும் நன்றிகள் என்றும், சீனா சமூக வாழ்வு பகுதியில் சீனாவின் பழைய ரோம் கண்காட்சி பற்றியும் இந்த கண்காட்சி சீனா மக்களுக்கு பயன் உள்ள கண்காட்சி என்றும் சீனாவிற்கு ரோம்முக்கு உள்ள வித்தியாசம் பற்றியும் அறிந்துக் கொண்டேன். இந்த கண்காட்சியால் சீனா மக்களுக்கு பெருமை என்றும் தெரிந்துக் கொண்டேன். சீன மகளீர் பகுதியில் சீனாவின் உள்ள ஒரு நகரத்தின் இடைநிலை பள்ளி பற்றியும் சீனாவின் ஒரு தம்பதி ஒரு குழந்தை பற்றிய தொடர் கருத்தையும் அந்த பள்ளியில் ஒழுக்கம் நிறைவு கல்வி கட்டாயமாக்கி பாடம் நடத்தப்படுகிறது என்றும் அறிந்து கொண்டைன். சீன உணவு அரங்கம் பகுதியில் சீனா பிரியாணி பற்றி நீங்கள் கூறிய செய்முறையும் நாங்கள் பிரியாணி செய்தமுறையும் கொஞ்சம் வித்தியாசப்பட்டது இருந்தாலும் நீங்கள் கூறிய செய்முறைபடி செய்து சாப்பிட்டு பிறகு உங்களுக்கும் தகவல் அனுப்புகிறேன் வாணிக்கு நன்றி. என்று கண்டமங்கலம் எ முஜூபுர்ரஹ்மான் தமது அக்டொம்பர் திங்களில் கடிதங்கள் கருத்துத் தெரிவித்தார். வாணி அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் ஐசான்ரி என்றும் கிராமத்தை பற்றி தெரிய வந்தது. விவசாயிகள் இங்கு வாழ்கின்றனர் இந்த கிராமம் மலை பிரதேசத்தில் உள்ளது, பழ மரங்களை வளர்ப்பது இவர்களது தொழில் தொவ்வா என்னும் ஒரு வகைஉணவை இவர்கள் செய்வர் இங்கு பத்து குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள இளைஞர்கள் நகரில் சென்று வேலை செய்கின்றனர் என்று கி மதன் குமார்.