• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-20 09:48:01    
விளையாட்டுச் செய்திகள்

cri

கடல் கொந்தளிப்பாள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதி திட்டும் வகையில் சீன மேசை பந்து அணியும் பூப்பந்து அணியும் ஜனவரி 15ஆம் நாள் "உலகெங்கும் அன்பு" என்ற தலைப்பில் போட்டிகளை நடத்தின. முன்னாள் உலக சாம்பியன் பட்ட வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்களும், சீன தேசிய அணிகளின் தற்போதைய அனைத்து உறுப்பினர்களும் போட்டிகளில் கலந்துகொண்டனர். விளையாட்டு அரங்கத்தில் இருந்த தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள், உதவி வணிகர்கள் என அனைவரும் மும்முரமாக நன்கொடை செய்தனர். மொத்த 32 லட்சத்து 76 ஆயிரத்து 576 யுவான் திரட்டப்பட்டது. கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்கள் மீதான சீன விளையாட்டு வீரர்களின் அன்பை இது வெளிப்படுத்தியுள்ளது. 

2005ஆம் ஆண்டு உலக இளைஞர் குறுகிய பாதை பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப் போட்டி 9ஆம் நாள் செர்பியாவின் தலைநகரான பெல்கிரேட்டில் முடிவடைந்தது. மூன்று நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், சீன வீரர்கள் மொத்தம் ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெள்ளி பதக்கங்களையும் பெற்றனர். அவர்களில், ஆடவருக்கான 500 மீட்டர் பனிச் சறுக்கல் போட்டியில் சீன வீரர் சுய் லியாங் முதலிடத்தையும் சௌ ச்சின் யு இரண்டாம் இடத்தையும் பெற்றனர். தவிர, தொடர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன அணி 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

22வது பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் சீன வீராங்கனை சாங்தான், வீரர் சாங் ஹௌ ஜோடி, இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கல் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றனர். சீனப் பிரதிநிதிக் குழு இந்த விளையாட்டுப் விழாவில் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். 13ஆம் நாள் ஆஸ்திரியாவின் இந்ஸ்புருக் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், சீன அணி, மகளிருக்கான 1500 மீட்டர் விரைவு பனிச்சறுக்கல் போட்டியிலும், ஆடவருக்கான 500 பனிச்சறுக்கல் போட்டியிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் வென்றது.

2005ஆம் ஆண்டு உலக இளைஞர் ஐஸ் ஹாக்கி சாம்பியன் பட்டப் போட்டியின் பீ பிரிவுப் போட்டி 9ஆம் நாள் ருமேனியாவின் தலைநகரான புக்காரேஸ்ட்டில் நிறைவடைந்தது. சீன அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி இரண்டு தோல்லி என்ற நிலையில் இறுதியில் நான்காம் இடம் பெற்றது. ஏ பிரிவுப் போட்டி 4ஆம் நாள் ஏற்கனவே நிறைவடைந்தது. கனடா அணி சாம்பியன் பட்டம் பெற்றது.