• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-20 09:59:36    
விளையாட்டுச் செய்திகள்

cri

ஜனவரி 15ந் நாள் நடைபெற்ற, 22 வது உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 500மீட்டர் விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில், சீன வீராங்கனை ரென் ஹுய் 38.93 வினாடி என்ற சாதனையுடன் இந்த விளையாட்டுப் போட்டியின் புதிய சாதனையைச் செய்தார். அத்துடன் 78.80 என்ற சாதனையுடன் சீனப் பிரதிநிதிக் குழுவுக்கு இரண்டாம் தங்கப் பதக்கத்தை வென்றார்.

20வது காது கேளாதோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4வது நாளான ஜனவரி 9ஆம் நாள் சீன விளையாட்டு வீரர்கள் 2 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். ஏற்கனவே பெற்ற 3 வெள்ளி பதக்கங்களைச் சேர்த்தால், சீனப் பிரதிநிதிக் குழு இந்த முறை பெற்ற பதக்கங்களின் மொத்த எண்ணிக்கை மிக கூடுதலானது. இந்த போட்டி ஜனவரி 5ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறுகின்றது. 78 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 3000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் 15 பெரிய விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள். சீனா மொத்தம் 69 விளையாட்டு வீரகளை அனுப்பியுள்ளது. அவர்கள், நீச்சல், மேசை பந்து, பூப்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து முதலிய 6 போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குதிரை சவாரி தடை ஓட்டப் போட்டியில் ஜெர்மனி முதலிடம் பெற்றதற்கு உதவிய GOLDFEVER எனும் குதிரை தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதென உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், ஜெர்மன் அணியின் தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. விதியின் படி, அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் பெறும். சுவீடன் அணி இரண்டாம் இடத்தையும் ஜெர்மன் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

11ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் ஒப்பன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில், சீன வீராங்கனை பெங் சுங் 2-0 என்ற செட் கணக்கில் பிரான்சின் கடந்த ஆண்டு சாம்பியனும், உலகப் பட்டியலில் மூன்றாம் இடம் வகிப்பவருமான ரஷியாவின் வீராங்கனை MYSKINAவைத் தோற்கடித்தார். சர்வதேச போட்டியில் சீன வீராங்கனை ஒருவர், அனைத்து வகை போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெற்றவரைத் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்து மாக்கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சீன மக்கள் மிகுந்த அனுதாபம் தெரிவித்துள்ளனர். சீன விளையாட்டுத் துறையினர் அண்மையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். லியூ சியாங், லோ சியே ச்சுவான், பொங் போ உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற பல புகழ்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் நன்கொடை வழங்கினர். நிதி திரட்டும் வகையில், சீன ஆடவர் கால்பந்து போட்டியும், ஆடவர் மற்றும் மகளிர் கூடைப் பந்து போட்டியும் நடைபெற்றன. தற்போது, சீன விளையாட்டு வீரர்கள் திரட்டிய நிதி தொகை பத்து லட்சம் யுவானைத் தாண்டியுள்ளது.