இசை நிகழ்ச்சியில், இனிமையான சீனப்பாடலைக் கேட்க முடிகிறது. சீனாவின் நாட்டுப்புற பாடல்கள், புகழ்பெற்ற பாப் இசைகள் முதலியவை நேயர்களால் வரவேற்கப்பட்டன.
--இசை நிகழ்ச்சியில், தமிழ்பாடல் இடம்பெறுவதில்லை. ஏன்? சீன பாடல் ஒன்று, தமிழ்பாடல் ஒன்று என மாறிமாறி வழங்கலாம். பாடல்களுக்கு முன்பாக, இந்த பாடல், எந்த நேயர்களுக்காக எங்கள் தேர்வு என நேயர்களின் சிலரின் பெயர்களை கூறலாம். இதன் மூலம் நேயர்களை ஊக்கப்படுத்த முடியும் என்பது, பரசாலூர் S.உத்தமசீலனின் கருத்து.
அன்புடைய உத்தமசீலன் அவர்களே! வணக்கம். தங்களின் கருத்து நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இடம்பெறும் நேயர் விருப்பம் நிகழ்ச்சி, இந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில், பல தமிழ்பாடலைக் கேட்கலாம். இதனால், எமது இசை நிகழ்ச்சியில் நேயர்களுக்கு, தனிச்சிறப்பு வாய்ந்த சீன பாடலும் இசைகளும் வழங்கப்படுகின்றன.
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், உயர் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நேயர்களைக் கவர்ந்துள்ளது.
--நமது உடலுக்கு தேவை வெளிச்சம் என்று வந்த நல்ல கருத்துக்களைக் கொண்ட அறிவியல் உலகம் நிகழ்ச்சி மிக நன்று. குளிர்காலங்களில் ஒளி பற்றாக்குறை வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், நமது உடலுக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது என்ற பயனுள்ள செய்தியை இதன் மூலம் அறிந்துகொண்டேன் என்கிறார் செந்தலை, N.S.பாலமுரளி.
--இதில், பாதுகாப்பான சூரிய ஒளி என்ற தகவல் பயனுள்ளதாக இருந்தது. சூரிய ஒளி உடம்பில் பட்டால் வைட்ட மின் D.சத்து கிடைக்கிறது எனவும் உடம்பில் உள்ள வைட்ட மின் D யில் 90 சதவிகிதம் சூரிய ஒளியின் மூலம் தான் கிடைப்பதாக அறிந்துகொண்டேன் என்கிறார் தார்வழி, P.முத்து.
--இதய நோய் என்னும் கட்டுரையைக் கேட்டேன். இதய நோய் என்பது மனித உயிரை அச்சுறுத்தம் மிகப்பெரிய நோயாக தற்போது மாறிவிட்டது. திடீரென வருவதால் இதை ஆபத்தான நோய் என்றும் கூறலாம். இதய நோய்க்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகவும் நல்லது அல்லவா? என்று வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம் கருத்து தெரிவித்தார்.
--மூளையில் ஏற்படும் கட்டியை அகற்றுவதில் மைக்ரோ சர்ஜரி பயன்படுத்தப்படுகிறது. உரிய இடத்தை கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்வது என்பதற்கு மைக்ரோ ஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் துறையூர், G.ரமேஷ்.
--இந்த நிகழ்ச்சியில் அல்ஸ்வீமர் நோய் பற்றி கூறினீர்கள். இந்த வகையான நோய் கூட உள்ளனவா என்று வியந்துபோனேன். இந்த நோய் தாக்கும் இடம் வகை எப்படி? ஆரம்ப நிலையை கண்டறிவது என தற்காப்பு ஆலோசனை வழங்கியது அருமை என்கிறார் S.நாட்டாமங்கலம் V.ராமாகிருஷ்ணன்.
|