• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-18 16:58:03    
சீன சுற்றுலாதுறையின் பன்முகங்க வளர்ச்சி

cri

2004ம் ஆண்டின் முதல் 10 திங்களில் 2 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். 2003ம் ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை காட்டிலும் இது 49.8 விழுக்காடு அதிகமாகும். 2004ம் ஆண்டின் இறுதியில் சீன மக்கள் 63 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் குழுச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். சர்வதேச சுற்றுலாவைப் பொறுத்தவரை சீனா புதிதாக வளர்ந்துள்ள முக்கிய பயணி சந்தையாக மாறியுள்ளது என்று 2004ம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா காட்சியில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் எடுத்துக்காட்டியுள்ளது.

சீனாவின் ஹாங்காங், மகௌ ஆகிய பிரதேசங்களைத் தவிரவும், 1988ம் ஆண்டு முதல் சீன மக்கள் வெளியே சுற்றுலா செல்வதற்கான முதல் இடமாக தாய்லாந்து மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீன மக்கள் சுற்றுலா செய்ய சென்ற வெளிநாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2004ம ஆண்டு சீனாவின் சுற்றுலா இடங்கள் முழுமையாக வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவின் செல்வாக்கு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்திராத அளவுக்கு இந்த வளர்ச்சி வேகம் பெற்றுள்ளது.

2004ம் ஆண்டு பெபிரவரி 12ம் நாளன்று சீன அரசு சுற்றுலா ஆணையம் ஐரொப்பிய ஒன்றியத்தின் 12 நாடுகளுடன் அதிகாரப்பூர்வமாக உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், இத்தாலி, லக்கசம்பேர்க், நெதர்லாலாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், ஸ்வீடன் ஆகியவை இந்த 12 நாடுகளாகும். அதை தொடர்ந்து டென்மார்க், அயர்லாந்து, நார்வே, ஐஸ்தீவு, ஸவிட்சர்லாந்து, லுமேனியா முதலிய 7 நாடுகளில் சீன சுற்றுலா குழுக்கள் பயணம் செய்வது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையை ஏற்படுத்தியுள்ளது.

2004ம் ஆண்டு மே திங்கள் முதலாம் நாள் முதல் சைப்ரஸ், செக், எஸ்தோனியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவானியா, மால்டா, போலந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவெனியா ஆகிய 10 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையின் படி, இருதரப்பும் கையொப்பமிட்ட ADS உடன்படிக்கை இந்த பத்து நாடுகளுக்குப் பொருந்தும். 2004ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1ம் நாள் முதல் சீனாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் மக்களும் ஐரோப்பாவுக்கான குழு சுற்றுலா அலுவல் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தவிர, கீன்யா, செனெக்கல், டுனிசியா, ஜாம்பாப்வே, மாரிஷியஸ், எத்தியோப்பியா, சாம்பியா, தான்சானியா ஆகிய 8 ஆப்பிரிக்க நாடுகளும் மேற்கு ஆசிய நாடான ஜோர்டானும் 2004ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 15ம் நாள் முதல் சீன மக்கள் வெளியே சுற்றுலா பயணம் செய்யும் நாடுகளாக மாறியுள்ளன.