• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-18 17:28:11    
நேயர் நேரம்44

cri
முதற்கண், நாள்தோறும் இடம்பெறும் செய்திகள் மற்றும் செய்தித்தொகுப்பு பற்றிய நேயர்களின் கருத்துக்கள்.

--செய்தி வாசிக்கும் நேரம் அதிகமாகி உள்ளது. அது போலவே செய்தித்தொகுப்பு இரண்டு வழங்குவது மிகவும் அருமை. இப்படிப்பட்ட செய்தித்தொகுப்பில் சீனாவின் வெள்ளத்தடுப்பு பணி பற்றி கூறியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற படி சீன வேலை வாய்ப்பு அதிகரிப்பு பற்றிய செய்தித்தொகுப்பில் சீன அரசு வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுத்துள்ள நடவடிக்கையை தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் அரியாக்கவுண்டம்பட்டி, எ.இளங்கோவன்.

--வறிய மாணவர்களுக்கான சீன அரசின் உதவி என்ற கட்டுரையைக் கேட்டேன். இந்த உதவித்திட்டம், கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர் அனைவருக்கும் பள்ளிக்கு வர மாபெரும் உதவிபுரியும். இதன் மூலம் பலன்பெறும் மாணவர்கள் அனைவரும் தாய்நாட்டிற்கு பெரிதும் விசுவாசமாக இருப்பார்கள் என்பது உறுதி என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.

--செய்தித்தொகுப்பில் ஐ.நாவின் சீர்திருத்தம் பற்றி கேட்டேன். இன்றைய உலக எதிர் நோக்கியுள்ள போர் அச்சுறுத்தல், உலக மக்களில் பலர் பட்டினியால் வாடுகின்றனர் என்பது பற்றி, இதனை எல்லாம் தீர்க்கும் நோக்கத்துடன் சமாதான நியாயமான வாழ்வுகள் உலக மக்களுக்கு கிடைக்க ஆவன எல்லாம் செய்யப்பட வேண்டும் என்று பாராட்டுகிறேன் என்கிறார் பனப்பாக்கம், R.கிருஷ்ணமூர்த்தி.

--செய்திகளில், சீன-இந்திய சிறப்பு பிரதிநிதிக்குழுவின் 3வது பேச்சுவார்த்தை, வெற்றிப்பெற்றதைத் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகின்றேன். தவிர, 2004ம் ஆண்டில், 1000 கோடி அமெரிக்க டாலை தாண்டவுள்ள சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மகத்தான சாதனையாகும். உலகின் 4வது வர்த்தக நாடாக உள்ள சீனா மேலும் முன்னேற வாழ்த்துகின்றேன் என்கிறார் திருச்சி அண்ணாநகர் R.மகேந்திரன்.

--சீன தலைமையமைச்சர், சர்வதேச நாணய நிதியத்திந் தலைமை இயக்குனரைச் சந்தித்துரையாடினார் என்பதை செய்தியில் கேட்டறிந்தேன். உலகின் பொருளாதார நிலைமை சீன பொருளாதார நிலைமை மற்றும் கொள்கை, பொது அக்கரை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை குறித்து இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டது சிறப்பானது என்கிறார் முனுகப்பட்டு, P.கண்ணன்சேகர்.

சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீன வறுவல் நேயர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சமைத்து ருசித்த பின்பு. அவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

--இறால் மீன்-பட்டனி சுன்டலை அன்று சமைத்து சாப்பிட்டோம். எனது நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பினோம். அவர்களும் சாப்பிட்டார்கள். மிக்க சுவையாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எப்படி இந்த மாதிரி சுவையான உணவுகளை செய்து சமைத்து சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார்கள் என்கிறார் சேந்தமங்கலம் வி.சுகுமார்.

--இந்நிகழ்ச்சியில், சற்று வித்தியாசமான வேற்கடலை அவியல் உணவு என்னை வெகுவாக கவர்ந்தது. எங்கள் தமிழ் நாட்டில் வேற்கடலையை பச்சையாகவே அல்லது காயவைத்தேதான் சாப்பிடுவோம். எங்கள் குடும்பத்திற்கு புதிய சமையலாக தோற்றமளித்தது. எங்களுக்கு மட்டுமல்ல கேட்ட அனைத்து நேயர்களையும் சுவைக்கத்தூண்டும் ஒரு சமையல் பாராட்டுக்கள் என்கிறார் எஸ்.நாட்டாமங்கலம், வி.ராமகிருஷ்ணன்.

--வெள்ளரிக்காய் கிச்சடி மிகவும் சுவையாக இருந்தது. வெள்ளரிக்காய் நம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆகவே இதை உண்பது நம் உடலுக்கு மிகவும் ஏற்றதே என்கிறார் விஜயமங்கலம், குணசீலன்.

--காளான் இறால் வறுவல் என்ற சீன உணவு வகை செய்வது எப்படி என தெரிந்து கொண்டேன். இந்த உணவை சமைத்து உண்ணுவேன் என்கிறார் தார்வழி P.லட்சுமி.

--சீன உணவுப்பண்பாடுகளைப் பற்றி கேட்டேன். கடல் வாழ் உயிரினங்கள் முதல் எல்லா உணவு வகைகளையும் கேட்டேன். சூப் தயாரிப்பு முறைகளில் கோழி இறைச்சி, சூப் தயாரிப்பில் இஞ்சி, பேரிச்சம்பழம் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பானது. சீன மக்கள் விரும்பி சாப்பிடுவதாகவும் உடலூக்கு நல்ல பயன் தருவதையும் கேட்டேன் என்கிறார் மூனநாடு, கே.அடைக்கலம்.

--சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி மிகவும் அருமை. முட்டை, இறைச்சி தூள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் உணவு வறுவல் புத்துணர்ச்சி தரும் என்பதை தெரிந்துகொண்டேன் என்று, பாண்டமங்கலம், P.R.கார்த்திகேயன் தெரிவித்தார்.

--இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், மீண்டும் ஒரு சைவ உணவு செய்முறை பற்றி கூறப்பட்டது. நாங்கள் வெள்ளரிக்காயை அடிப்படியே அல்லது உட்பு மிளகாய் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், இன்று ஒரு சுவையான பச்சடி அறிமுகமாகியது. பூண்டு, உட்பு, வினிகர் அல்லது புளிச்சுவை சேர்த்திருக்கிறது என்கிறார், சேந்தமங்கலம், வி.வசந்த்.

--இனிப்பான பழங்கள் இடம்பெறும் சூப்வகை பற்றி தெரிந்து கொண்டேன். இதில், அறிமுகமில்லா உணவு துகள்கள் இடம்பெற்றுள்ளது. இதை வாங்குவது சரனம் என்று, வளவனூர் கே.சிவக்குமார் தெரிவித்தார்.