• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-19 08:22:29    
நேயர் நேரம்45

cri

அறிவியல் உலகம் நிகழ்ச்சியால் தலைவலியை உண்டாக்கும் பாணங்களை தவிர்ப்பது நலம் என பேராசிரியர் ந கடிகாசலம் கூறியது உண்மை. கோக்கோ கோலா போன்ற பாணங்கள் நச்சு தன்மை வாய்ந்தவை. இது தலைவலியை உண்டாக்க காரணாமாக இருக்கிறது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டால் தலைவலி காரணமாக இருக்கும். எனவே தண்ணீரை நிறைய அருந்துவதனால் தலைவலியை தவிர்க்கலாம் என்ற செய்தி பயனுள்ள தகவல் என்று பி கண்ணன் சேகர் தமது கடந்த அக்டொபர் கடிதங்களில் தெரிவித்தார். அக்டொபர் திங்கள் 23ம் நாள் இசை நிகழ்ச்சி பகுதியில் விஜயலட்சுமி தொகுத்து வழங்கிய முதல் பாட்டு பெய்சிங்கின் வசந்த காலம் குறிக்கும் வகையில் சிறப்பாக தொகுத்து வழங்கினீர்கள். அருமையாக இருந்தது அடுத்து வந்த பாடல்களும் சிறப்பாக இருந்தன அருமையாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார் அவர்களுக்கும் நன்றி அக்டொம்பர் திங்கள் 25ம் நாள் சீனா உணவு அரங்கம் பகுதியில் மீன் சூப் பற்றிய சமையல் குறிப்பு கேட்டேன். நான் இது வரையில் காய்கறிசூப் மற்றும் இறைச்சி சூப் பற்றி தான் கேள்விபட்டு உள்ளேன் சமைத்தும் சாப்பிட்டு உள்ளேன். இப்போது நீங்கள் கூறிய மீன் சூப் எனக்கு புது அனுபவம் தயாரித்து சாப்பிட்டு உடனே கடிதம் எழுதுகிறேன் என்றும் எ முஜூபுர்ரஹ்மான் எழுதியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள ஒரு வீதியை பெயர் மாற்றம் செய்ய இருப்பதாகவும் அந்த வீதிக்கு சீன-பாகிஸ்தானின் உறவுக்கு நட்பை விளக்கும் நினைவாகவே சூ என்லாய் வீதி என்ற சீன தலைவரின் பெயரை வைக்கப்படும் என்று மிக ஆச்சரியமான செய்திகேட்டு மகிழ்ந்தேன் இதன் மூலம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு நன்கு புலப்படுகின்றது. வளர்ந்து வரும் சீனா உலகின் நாடுகளின் வரிசையில் முதலிடம் இருப்பதையும் ஐநாவின் 1000ம் ஆண்டு வளர்ச்சி எனும் குறிக்கோளை சீனா தன்னுடைய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த குறிக் கோளாக நிறைவேற்றி வருவதில் இன்று உலகில் சீனா முதலீடம் பெற்றிருப்பதையும் பொருளாதார வளர்ச்சியிலும் முதலிடம் பெற்று இருப்பதையும் ஐநா பொது செயலாளர் சின்குவா பல்கலைகழக மாணவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் இவைகளை கேடட்றிந்தேன்.

மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி

--சீன மகளிரின் உடல் நல பாதுகாப்பு வளர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருவதையும். அதற்கு உதவிடும் பொருட்டு, பல எளிய வகை காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதையும் கேட்டு ரசித்தோம். சீன அரசின் முயற்சிகளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார் செல்லூர் N.சீனிவாசன்.

--இந்த நிகழ்ச்சியை வாயலாக சீன மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்களை அறிய முடிகிறது. தற்போது சீனாவில் காப்பீடு துறையானது பெரும் வரவேற்பு கண்டு வருகிறது. சீன மக்களின் உணவு, உடை பிரச்சினைகளைத் தீர்த்து, சீன மக்களின் தங்கள் வாழ்க்கைத்தரத்தினை சீன அரசு உயர்த்தி வருவதை இன்றைய இந்நிகழ்ச்சியின் வாயலாக அறிய வைத்தீர்கள் என்கிறார் திருச்சி அண்ணாநகர், V.T.ரவிச்சந்திரன்.

--சிவப்பு மிளகாய் பயன்பாடு பற்றியும் அது சிவப்பு நிற வங்கிகள் என்று கூறியதும். இந்த மிளகாய் சீன விவசாயிகளின் பணப் பயிர் என்பது தெரிகிறது. இந்த மிளகாய் உற்பத்தி பற்றி நான் CHINA TODAY இதழில் படித்துள்ளேன் என்கிறார் விழுப்புரம், S.பாண்டியராஜன்.

--சீனாவில் காப்பீட்டு பற்றி கேட்டவற்றில் இந்த காப்புறுதி பற்றி சீன மக்களின் நிலையைப் பற்றியும் காப்பீடு முறைமைகள் பற்றியும் ஒரு ஆண்டுக்கு 60க்கும் அதிகமானக் காப்புறுதி நிறுவனங்கள் உள்ளது என்றும் இந்தக் காப்புறுதி நிறுவனங்களின் நிலையும் அவை மக்களுக்கு செய்யும் உதவிகள் பற்றியும் இன்றைய நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் நடுவண் அரசினால் பெறப்படும் பாதுகாப்பு பற்றி கேட்டேன் என்கிறார் ராமியம்பட்டி S.பாரதி.