• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-20 17:40:16    
சீன மக்களின் சுற்றுலா ஈடுபாடு

cri

2004ம் ஆண்டு வசந்த விழா துவங்கியது முதல் சீன மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வசந்த விழா நடைபறும் ஒரு வார காலத்தில் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை எட்டியது. 2003ம் ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை காட்டிலும் சுமார் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2004ம் ஆண்டில் ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சீன மக்கள் அதிக அளவில் சுற்றுலா சென்றுள்ளனர். மே தினம் முதலாம் நாளில் அனைத்து சுற்றுலா நிறுவனங்களின் அலுவல்களும் முழுமையாக ஜெர்மனிக்கு மாறிவிட்டன. தவிர 2004ம் ஆண்டு வசந்த விழா, மே தினம் போன்ற விழாக்காலத்தில் மாலத்தீவு உள்ளிட்ட தீவு நாடுகளில் சுற்றுலா செய்வதும் சீனப் பயணிகள் முதலாவாது விருப்பமாகியுள்ளது.

தேசிய விழாவான அக்டோபர் திங்கள் முதலாம் நாள் முதல் 7ம் நாள் வரையான ஒரு வார காலத்தில் ஐரோப்பாவுக்குச் சுற்றுலா செல்வது சீன மக்களிடையில் வரவேற்பு பெற்றுள்ளது. ஐரோப்பா சீனாவுக்கு திறந்து வைக்கப்ப்டட பின்னர் வரும் சில ஆண்டுகளில் பல பத்து லட்சத்துக்கும் அதிகமான சீன மக்கள் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா செய்வர் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக சுற்றுலா நிறுவனம் வழங்கிய புள்ளிவிபரத்தின் படி உலகில் சுற்றுலா நுகர்வு வரிசையில் சீனா முதல் 10 இடங்களில் இடம் பெறுகின்றது. தவிரவும் 2004ம் ஆண்டு சப்டெம்பர் திங்கள் 1ம் நாள் முதல் கல்விகற்பதற்காக ஜப்பானுக்குச் செல்லும் சீன இடைநிலை மற்றும் துவக்க பள்ளி கூட மாணவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஜப்பானிய அரசு தீர்மானித்துள்ளது. ஆகவே தேசிய விழா கொண்டாடப்படும் வாரத்தில் சீன மக்கள் தெரிவு செய்யும் முதல் சுற்றுலா நாடாக ஜப்பான் மாறியுள்ளது.

2004ம் ஆண்டு ஜுலை திங்கள் 1ம் நாள் முதல் பெய்சிங், ஷாங்காய் குவாந்துங் மாநில மற்றும் நகரங்களிலிருந்துமட்டுமல்ல தியென்சின், ஹேபேய், சாந்துங், சியான்சு செச்சியான் சுன்சின் ஆகிய மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இருந்தும் சீன மக்களை ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுலா சென்றுள்ளனர். 2004ம் ஆண்டு சர்டெம்பர் திங்கள் 15ம் நாள் முதல் பெய்சிங், ஷாங்காய் குவாந்துன் ஆகிய மாநிலம் மற்றும் நகரங்களில் வாழ்கின்ற மக்கள் மட்டுமல்ல லோனின், தியென்சின், சாந்துங், சியான்சு, செச்சியான் ஆகிய மாநில மற்றும் நகர வாசிகளும் ஜப்பானில் சுற்றுலா செய்துள்ளனர்.

2004ம் ஆண்டின் இறுதியில் பொருட்களை வாங்கும் சுற்றுலா துறை வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டு பெருமளவில் பொருட்களை விற்பனை செய்துள்ளன. சீனாவின் தேசிய விழா நாட்களில் சீன மக்கள் ஐரோப்பாவில் கொள் முதல் செய்வது முதலாவது இடம் வகித்தது. தவிர, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய பொருட்கள் விற்கும் ஆசிய நாடுகளும் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக புதிய வழி முறைகளை முன்வைத்துள்ளன.