இன்றைக்கு நான் புதுவகை உணவு சீன கோவா ரோ பற்றி கூறுவேன். சீன கோவா என்பது ஒரு வகை கீரை. சீன மக்களுக்கு பொதுவாக கீரை என்றாலே மிகவும் பிடிக்கும்.
இனி, சீன கோவா ரோ வறுவல் செய்ய என்னென்ன
பொருட்கள் வேண்டும்:
சீன கோவா, 300 கிராம்
கோழி கொத்துக் கறி, 100 கிராம்
முட்டை, ஒன்று
காளான், 50 கிராம்
இறால், 50 கிராம்
கேரட், 20 கிராம்
வெங்காயம், 10 கிராம்
வாசனை மசாலாவுக்கு என்னென்ன பொருட்கள்:
மிளகு, 5 கிராம்
உப்பு, 5 கிராம்
நல்லெண்ணை, 5 கிராம்
இந்தப் பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கிறது. எப்படி சமைப்பது என்று சொல்கின்றோம்.
முதலில், சீன கோவாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு, முழுமையாக வென்னீரில் போடணும். சீன கோவா மிருதுவாக மாறிய பின்பு, சுடு நீரிலிருந்து எடுத்து, குளிர் நீரில் போடவும்.
அடுத்து, மிருதுவான சீன கோவாவை நீண்ட சதுரமாக வில்லை போடணும்.
இனி, கொத்துக் கறியைத் தயாரிப்போம். காளான், இறால், கேரட், வெங்காயம் ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக அரிய வேண்டும். இதில், கோழிகொத்துக் கறி, முட்டை, கொஞ்சம் மிளகு, உப்பு, நல்லெண்ணை ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். உங்களுக்கு பிடிக்கும் இதர காய்கறிகளையும் இதில் சேர்த்து கூட்டாக கிளறலாம். கொத்துக்கறி குச்சிகள் போல மாறும் அப்படியே இருக்க விட வேண்டும்.
இனி, சீன கோவாவில், கொத்துக்கறி சேர்த்து, ரோத் தயாரிக்கணும். சீன கோவா வில்லை ஒன்றில், சிறிது கொத்துக்கறியை வைக்க வேண்டும். பிறகு, சீன கோவா வில்லையா அழகாக சுருட்டுங்கள்.
அழகான ரோ உருவாகி விட்டது. கலைப்பொருள் போல் இருக்கிறது.
இந்த வறுவல் பார்ப்பதற்கு மிகவும் அழகானது. வீட்டு விருந்தில் தயாரித்தால், விருந்தினர்கள் கண்டிப்பாக மயங்கிப் போவார்கள்.
வில்லை போடப்பட்ட சீன கோவா ரோ, தட்டில் வைத்துள்ளேன். சீன கோவா ரோ நீராவி வாணலியில் வைத்து, 15 நிமிடம் ஆவியில் வைக்க வேண்டும்.
இட்லி வைப்பது வேலவா? சரி, இந்த வறுவல் தயார். இது, சுவையானது மட்டுமல்ல, சத்துள்ள உணவு ஆகும்.
சைவ உணவு சாப்பாட்டு நேயர்கள், தமது வழக்கக்கிணங்க, கொத்துக் கறியில் காய்கறி மட்டும் சேர்த்து, சீன கோவாவை சுருட்ட முடியும்.
அடுத்த முறை, ஒரு வகை சீன இனிப்பு தயாரிப்பது பற்றி, அறிமுகப்படுத்துகிறேன். ஆகையால், பேரீச்சம் பழம், சர்க்கரை, அரிசி மாவு முதலியவற்றை முன்கூட்டியே எடுத்து தயாராக வைத்திருங்கள்.
|