பாகிஸ்தானில் உள்ள ஒரு வீதியை பெயர் மாற்றம் செய்ய இருப்பதாகவும் அந்த வீதிக்கு சீன-பாகிஸ்தானின் உறவுக்கு நட்பை விளக்கும் நினைவாகவே சூ என்லாய் வீதி என்ற சீன தலைவரின் பெயரை வைக்கப்படும் என்று மிக ஆச்சரியமான செய்திகேட்டு மகிழ்ந்தேன் இதன் மூலம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு நன்கு புலப்படுகின்றது. வளர்ந்து வரும் சீனா உலகின் நாடுகளின் வரிசையில் முதலிடம் இருப்பதையும் ஐநாவின் 1000ம் ஆண்டு வளர்ச்சி எனும் குறிக்கோளை சீனா தன்னுடைய வளர்ச்சி மற்றும் சீர்த்திருத்த குறிக் கோளாக நிறைவேற்றி வருவதில் இன்று உலகில் சீனா முதலீடம் பெற்றிருப்பதையும் பொருளாதார வளர்ச்சியிலும் முதலிடம் பெற்று இருப்பதையும் ஐநா பொது செயலாளர் சின்குவா பல்கலைகழக மாணவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் இவைகளை கேடட்றிந்தேன் சர்வதேச விவகாரங்களில் ஐநாவின் பொது செயலாளர் அன்னான் அவர்கள் முக்கிய பங்கு வகிப்பதையும் சீனாவின் சர்வதேச விவகாரங்களில் நிலைப்பாட்டையும் அதன் செயல்திறனையும் பாரட்டி பேசியதாகவும் சீனாவோடு தாமும் ஒத்துழைப்பதாக கூறியதையும் கேட்டு சீனாவின் நற்சிந்தனை, செயல்பாடு இன்று உலக அரங்கில் உயர்ந்து வருவதை உணர்ந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி கேட்ட அனைவரும் சீனாவின வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் வளர்க்கும் நட்பு ஒத்துழைப்பு கொள்கையும் சிறப்பு பெறுவதை விரும்புகிறேன் என்று நேயர் சீ பாரதி தமது கடிதங்களில் கருத்துகளை தெரிவித்தார். சீன மக்களின் இரங்கல் நிகழ்ச்சி நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தது. அதன்பின் வந்த அதிகார ஒப்படைப்பு செய்தி சுருக்கம் நன்றாக இருந்தது. உங்கள் குரல் நிகழ்ச்சியில் சகோதரர் ஈதொக்குவுணனில் செய்திகள் நன்றாக இருந்தது. சீன வானொலியின் துவக்கம் 1963ம் ஆண்டு 41 ஆண்டுகள் சிறப்பு சேவை புரிந்து 42ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது பற்றி கூறினார். 21 வகையான சிறப்பு நிகழ்ச்சி பற்றியும் பாராட்டினார் என்று கோயமுத்தூர் நேயர் எ ராமச்சந்திரன் கூறினார். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திருமதி தி கலையரசி அவர்களும் திரு செல்வம் அவர்களும் கருத்தரங்கு குறித்த பல தகவல்களை வழங்கினீர்கள். பல சந்தேகங்கள் தெளிவு பெற்றுவிட்டன, அன்புள்ள எஸ் செல்வம் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் கடிதங்களில் இவ்வாறு குறிப்பிட்டார். உலகில் எத்தனையே வானொலி நிலையங்கள் இருந்தும் மகளிர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை தொகுக்கும் ஒரே வானொலி சீன தமிழ் வானொலி ஆகும். ஜூலை 15 முதலி ஒரு மணி ஒலிபரப்பாக சீன தமிழ் ஒலிபரப்பு துவங்கியதற்கு என் வாழ்த்துகள் மேலும் மகளிரை பற்றிய அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டுகிறேன் என்று நாகர்கோவில் ஒய்ஸ்வின் சிறப்பாக பாராட்டினார்.
|