1998ஆம் ஆண்டில், தேசிய கல்வித்துறையில் முன்னேறிய மாவட்டமாக, பேங் நிங் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில், அதன் வெற்றிகரமான அனுபவம், சீனாவின் கல்வி எனும் அரசு நிலை இதழில் அறிவிக்கப்பட்டு, பரவல் செய்யப்பட்டது. 2002ஆம் ஆண்டில், இடைநிலை பள்ளி மற்றும் துவக்கப் பள்ளியின் தகவல் கல்விக்கான மாதிரி மாவட்டமாக, அது நாட்டின் கல்வி அமைச்சகத்தால் சூட்டப்பட்டது. பல வழிமுறை மூலம் 50 கோடி யுவான் முதலீட்டைத் திரட்டி, கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவது என்பது, இச்சாதனை பெறுவதற்குக் காரணமாகும். உலக வங்கியின் கடன் பெறுவது, 9 ஆண்டுகால கட்டாய கல்விமுறையை பரவலாக்குவது, சர்வதேச உதவியைப் பெறுவது, பொது மக்களிடமிருந்து நிதியைத் திரட்டுவது ஆகியவை இம்முறைகளில் இடம்பெறுகின்றன. இப்போது முழு மாவட்டத்திலும் 350 கல்வி கட்டடங்கள் உள்ளன. எந்த கிராமங்களிலும் அல்லது பட்டணங்களிலும் மிக சிறந்த வீடுகள், பள்ளி கட்டடங்களாகும். இம்மாவட்டம் அடிப்படை கல்வியை இறுகப்பற்றியதினால், அதன் கல்வி நிலை உயர்ந்து வருகிறது.
பேங் நிங் மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியைக் குறிப்பிடுகையில் அவர் கூறியதாவது—
"தொழில் துறையை இறுகப்பற்றுவது, வேளாண் துறையை முக்கியமாக வளர்ச்சியுறச் செய்வது, நெடுநோக்கு பார்வையுடன் போக்குவரத்தை வளர்ச்சியுறச் செய்வது ஆகியவை, எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டமாகும்" என்றார் பேங் நிங் மாவட்ட கட்சி கமிட்டியின் துணை செயலாளர் ஷாங்.
அவரின் உரையாடல் மூலம், பேங் நிங் மஞ்சு இன தன்னாட்சி மாவட்டத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை நாங்கள் கண்டுள்ளோம். 1 2 3 4
|