• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 19:52:00    
விளையாட்டுச் செய்திகள்

cri

20வது காது கேளாதோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 16ஆம் நாள் இரவு ஆஸ்திரியாவின் மொல்பெனில் நிறைவடைந்தது. சீனப் பிரதிநிதிக் குழு மொத்தம் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 9ஆம் இடம் வகிக்கின்றது. உலக கோப்பைக்கான ஆடவர் வாள் போட்டியின் தென்மார்க் சுற்று 16ஆம் நாள் பிற்பகல் நிறைவடைந்தது. மொத்தம் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 76 விளையாட்டு வீரர்கள் அதில் கலந்துகொண்டனர். சீனாவின் 5 விளையாட்டு வீரர்கள் முறையே 5ம், 7ம் மற்றும் 8ம் இடம் பெற்றனர்.

2005ஆம் ஆண்டு கத்தார் எட்டு நாட்டு கால்பந்து அழைப்பு போட்டி 15ஆம் நாள் தோஹாவில் துவங்கியது. பீ பிரிவில் சீன இளைஞர் குழு முதலாவது போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டது. சிங்கப்பூர் கால்பந்து அணி 16ம் நாள் தன் நாட்டில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தோநேசிய அணியைத் தோற்கடித்து. இதனால், தென்கிழக்காசிய புலி கோப்பைக்கான கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் 5-2 என்ற கோல் மொத்த சாதனையுடன் இந்தோநேசிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. புலிகள் கோப்பை கால்பந்து போட்டி 1996ஆம் ஆண்டு துங்கியது. இரண்டு ஆண்டுகள் ஒரு முறை நடைபெறுகின்றது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் தென்கொரியாவின் கிம் யுன் யுங் என்பவர் உலக தைகுன்தௌ சம்மேளனம் உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளில் பணிபுரிந்த போது, பொது பணத்தை ஊழல்படுத்திய வழக்கு குறித்து இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சுமார் 6 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் இத்தீர்ப்பு விதித்துள்ளது.

2005ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான சுதந்திர பாணி உறைப்பனிச் சறுக்கல் போட்டியின் அமெரிக்க சுற்றுப் போட்டி 16ஆம் நாள் துவங்கியது. 17ஆம் நாள் நடந்த போட்டியில் சீன வீராங்கனை லீ நி நா 186.72 என்ற புள்ளிகளை பெற்று மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் பெற்றார்.