• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-25 16:52:00    
விளையாட்டுச் செய்திகள்

cri

பனிச்சறுக்கல் டிசம்பர் 19ஆம் நாள் 22வது உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 1500 மீட்டர் குறுகியத் தூர விரைவுப் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை வாங் வெய் 2 நிமிடம், 22. 349 வினாடி என்ற சாதனையுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி 22வது பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் சீன வீராங்கனை சாங்தான், வீரர் சாங் ஹௌ ஜோடி, இரட்டையர் இசை நடன பனிச்சறுக்கல் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றனர். சீனப் பிரதிநிதிக் குழு இந்த விளையாட்டுப் விழாவில் பெற்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். 13ஆம் நாள் ஆஸ்திரியாவின் இந்ஸ்புருக் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், சீன அணி, மகளிருக்கான 1500 மீட்டர் விரைவு பனிச்சறுக்கல் போட்டியிலும், ஆடவருக்கான 500 பனிச்சறுக்கல் போட்டியிலும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் வென்றது.

2005ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய தென்னிஸ் ஒப்பன் போட்டி 17ஆம் நாள் மொல்பெனில் துவங்கியது. சீன வீராங்கனைகள் பொங் சுவாய், செங் ச்சியே, லீ திங், லியூ நான் நான் ஆகியோர் அதில் கலந்துகொள்கிறார்கள். முதல் நாள் போட்டியில், லீ நா அமெரிக்க வீராங்கனை கொலன் வீலைத் தோற்கடித்து இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதி பெற்றார்.

சீனாவில் செல்வாக்கு மிக்க விளையாட்டுத் துறையின் LAUREUS விருது மதிப்பீட்டு நடவடிக்கை 17ஆம் நாள் பெய்சிங்கில் துவங்கியது. விளையாட்டு அரங்கிலான ஒஸ்கார் என அழைக்கப்படும் இந்த விருது, சீனத் தனிச்சிறப்பியல்புடைய விளையாட்டுத் துறை விருதாகும். தலைசிறந்த விளையாட்டு வீரர், தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை, ஆயுள் சாதனை விருது உள்ளிட்ட 11 பரிசுகள் இதில் இடம்பெறுகின்றன.

 

27வது DAKAR RALLY போட்டி 16ஆம் நாள் செனெகல் தலைநகரான தக்காரில் நிறைவடைந்தது. பிரெஞ்சு ஓட்டுநர் PETER HANSEL கார் குழுவில் சாம்பியன் பட்டம் பெற்றார். பிரேஞ்சு வீரர் தெஸ்பிரேஸ் மோட்டார் குழுவின் சாம்பியன் பட்டம் பெற்றார். பராதின் அணியைச் சேர்ந்த சீன ஓட்டுநர்களான சோ யுங், சி லாங், லு நிங் சுன் போட்டியை சீராக நிறைவேற்றினர். மொத்த சாதனையில் சோ யுங் 19ம் இடம் வகிக்கின்றார். சி லாங் 44ம் இடம் வகிக்கின்றார். லு சுன் 55ம் இடம் வகிக்கின்றார்.