• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-24 08:55:26    
நேயர் நேரம்48

cri
முதலில்,வேலூர் V வாசுதேவன் J கோபி வி குமார் இராசிபுரம் R ஜெயந்தி இலங்கை M J F LASHNA உட்பட பல நேயர்கள் கடிதங்கள் மற்றும் ஈமேல் மூலம் சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். 2005ம் ஆண்டிற்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நலவாழ்த்துக்களைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் குடும்பத்திலும் பணியிலும் அமைதியும் மகிழ்ச்சியும் மலர்ந்து, பல வளர்ச்சிகளும், முன்னேற்றங்களும் தொடர மனமாற வாழ்த்துகிறேன். தாங்கள் தமிழ் மொழிக்காகவும், சகோதரத்துவத்தற்காகவும் நட்புறவிற்காகவும் அயராது உழைத்து வருவதை மிகவும் மதிக்கிறேன். தாங்கள் கட்டுரைகள் வழங்கும் போதும் தமிழ் மூலம் வழங்கும் போதும், தொலைபேசியில் நேர்காணல் நடத்தும் போதும் வெளிப்படும், தங்களின் அன்பும், நட்பும் நிறைந்த அணுகுமுறையும் தங்களை எங்கள் மனங்களில் இடம்பெற வைத்துவிட்டது என்று மதுரையிலிருந்து நேயர் S THIRUNAVUKKARASU தமது கடந்த டிசம்பர் திங்கள் 25ம் நாள் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 2005 ஜனவரி திங்கள் முதலாம் நாள் சீன தலைவரின் புத்தாண்டுச் செய்தி பிற செய்திகள் நன்று. நல்ல தகவல் தந்தன. உங்கள் குரலில் எம் வகுப்பு மாணவர்கள் உற்சாகமடைந்தனர். நட்பு பாலம் பேட்டியில் சீன இந்திய பழமையான தொடர்புகளை பற்றித் தெரிந்து கொண்டேன். அதன் மூல காரணம் பௌத்தமே. அதனால் தான் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவைச் சுற்றி பௌத்த நாடுகள் உள்ளதால் தன்னையும் தம் மக்களையும் ஆதி மதமான பௌத்தத்தில் இணைத்து பல லட்சமக்களையும் அதில் சேரவைத்தார். இன்னும் சேர்நது வருகிறார்கள். மதரீதியான உறவுகள் இருக்கமானவை. சீன பௌத்த கோவில்களின் வரலாற்றுத் தொகுப்புகளை தொடராக நேயர்களுக்கு வழங்கலாம். பௌத்த ஜதகா கதைகள் ஜாதகக் கதைகளும் இவ்வுலகுக்குத் தேவை அதையும் அனிமேசன் முறையில் தயாரித்து உலகமொழிகளில் வழங்கினால் சீனா மற்றும் பல்வேறு நாடுகளின் உறவுகள் வளர துணை புரியும் என்று MUMBAI M.SUKUMAR தமது கடிதங்களில் தெரிவித்திருக்கிறார். பல விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்றன. வீரர்கள் வீராங்கனைகள் பல பரிசுகளை வென்றனர் அனைவருக்கும் என் உளம் கனிந்த நலவாழ்த்துக்கள்.