• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 14:32:26    
கடன் வாங்குவதிலான சீன முயற்சி

cri
செய்தியாளர்.......தொழில் நிறுவனங்களின் அலுவலை சீர்திருத்தி தனியார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் சீனா மேற்கொண்டுள்ள முயற்சி பற்றி உங்கள் கருத்து என்ன?

கிரேன்........பொதுவாக கூறினால் சீனா மேற்கொண்ட முயற்சிகளை கண்டு ஆச்சரியப்பட்டேன். 1978ல் இருந்த சீனாவை இன்றைய சீனாவுடன் ஒப்பிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு அதிகமான காலகட்டத்தில் சீனப் பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரமாக மாறியுள்ளது.

இவ்வாண்டின் அறிக்கையைப் பார்த்தால் இன்றைய சீனா தொழில் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளை மேம்படுத்துவதில் மாபெரும் சாதனை கண்டுள்ளது. லத்தின் அமெரிக்காவில் சீராக வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சீனா சிறந்ததாக உள்ளது. சிலி இப்போது அப்பிரதேசத்தின் பொருளாதார வளர்சசியில் முன்னேறிய மாதிரியாக உள்ளது. சீனாவின் பல குறிக்கோள்கள் சிலியின் குறிக்கோளுடன் நெருங்கியவை. இது என் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்தியாளர்....சீனாவை பொறுதவரை பலவீனம் எது?

கேரன்..........சீனாவை பொறுவதவரை நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் கடன் வாங்குவதில் சீனாவுக்கு பலவீனம் இருக்கின்றது. கடன் கொடுப்போரின் நலனைப் பாதுகாப்பதில் அரசுக்கு திறமை குறைவு. நம்பிக்கை ஊட்டும் அமைப்பு முறை எதையும் நிறுவ வில்லை. கடன் வழங்குவோர் கடன் வாங்குவோரின் நம்பிக்கையையும் கடனைத் திருப்பி கொடுக்கும் திறனையும் சரிப்பார்ப்பதில் இன்னல்கள் நிலவுகின்றன.

செய்தியாளர்.........ஆனால் உங்கள் கருத்துக்கு எதிராக சீன வங்கிகள் பெரு மளவில் கடன் வினியோகிப்பதாக பலர் குறை கூறுகின்றார்கள்.

கேரன்........நீங்கள் சொன்ன கடனில் பெரும்பாலானவை தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வில்லை. வங்கிகள் கடன் தரும் போது அதிகமான லாபம் பெறுவதற்கு பதிலாக அரசின் கட்டளையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதில் தான் அதகிமாக அக்கறை காட்டுகின்றன. கோர்வையான வங்கி முறைமையையும் சட்ட சூழ்நிலையையும் நிறுவ வேண்டும் என்பதை சீன அரசு இப்போது புரிந்து கொண்டுள்ளது. அதாவது கடன் கொள்கையை மேன்மேலும் வங்கியின் பொருளாதார பயனை எவ்வாறு உயர்த்துவதென்ற அடிப்படையில் வைத்து அரசியல் அடிப்படையில் கடன் வழங்குவதை படிப்படியாக குறைக்க வேண்டும்.

செய்தியாளர்.......சீன வங்கியும் நாணய துறையும் என்ன எதிர்நோக்குகின்றன என்பது பற்றி உங்கள் கருத்து என்ன ?

கேரன்........ உரிய முறையில் நிதியை எவ்வாறு விநியோகிப்பது, அதனை வயந் மிக்க உற்பத்தியாளர்களுக்கு விநியோகிப்பது என்பன வரும் நீண்டகாலகட்டத்தில் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும். சீன வங்கி வட்டாரத்தில் திரும்பிவராத கடந் என்ற நிலை நிலவுகின்றது. இதை எவ்வாறு சமாளிப்பது, எதிர்காலத்தில் மேலும் சிறப்பான கடன் வழங்கும் கொள்கையை வகுப்பது, திரும்பவராத கடனினால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து எவ்வாறு விடுவிப்பது என்பன சீன அரசு எதிர்நோக்குகின்ற சவால்களாகும் என்று நான் கருதுகின்றேன்.