• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 14:41:35    
சீனாவின் மெத்தடோன் சிகிச்சை நிலையம்

cri

சீனாவின் சில நகரங்களில் போதை பொருள் உட்கொள்வோருக்காக மெத்தடோன் மருந்தை உட்கொள்ளும் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. போதை பொருள் உட்கொள்வோர் உள்ளூர் காவற்துறை வட்டாரத்தின் அனுமதியைப் பெற்ற பின் மருத்துவர் வழிகாட்ட குறிப்பிட்ட நேரத்தில் இந்நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெறுவர். அத்துடன் அவ்விடத்திலேயே மருத்துவரின் கண்காணிப்புடன் மருந்தை உட்கொள்ள வேண்டும். போதை பொருள் உட்கொள்வோருக்கு போதைப் பொருள் ஒழிப்பு சிகிச்சை செய்வதிலும் எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுப்பதிலும் மெத்தடோன் மருந்து உட்கொள்டு சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளது. இப்போது இது பற்றி பார்ப்போம்.

மெத்தடோன் மருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட ரசாயன திரவ மருந்தாகும். போதை பொருள் உட்கொள்வோரின் போதை பொருள் மீதான ஆர்வத்தை ஒபிப்பதற்கு அது முக்கிய பங்காற்றுகின்றது. தற்போது பல நாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் ஒழிப்பு சிகிச்சை நிலையங்கள் பொதுவாக மெத்தடோன் மருந்தை பயன்படுத்துகின்றன. இத்தகைய மருந்தை உட்கொள்வோர் மருத்துவரின் வழிகாட்டலின் கீழ் பாதுகாப்புடன் மெத்தடோன் மருந்து உட்கொள்வதால் ஹெராயின் போதைப் பொருளை அவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்கவோ, ஒரே ஊசியைப் பலரும் பயன்படுத்துவதால் எய்ட்ஸ் நோய் பரவலைக் குறைக்கவோ முடியும்.

உலகிலுள்ள பல நாடுகள் இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் போதை பொருள் உட்கொள்வோரிடையே எய்ட்ஸ் நோய் பரவல் விகிதத்தை பயன்தரும் முறையில் குறைக்க முடிந்தது. தற்போது சீனாவில் எச் ஐவ் கிருமியால் நீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 8 லட்சத்து 40 ஆயிரமாகும். எய்ட்ஸ் நோய் பொது மக்களிடம் பரவ துவங்கியுள்ளது. ஒரே ஊசியை பலரும் பயன்படுத்துவதன் மூலம் போதை பொருளை உடம்பில் செலுத்துவது என்பது சீனாவில் எய்ட்ஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாகும். இம்முறையைக் குறைத்து பின் எய்ட்ஸ் நோய் பரவலை தடுப்பது என்பது மெத்தடோன் மருந்து உட்கொள்ளும் முரையை மேற்கொள்வதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் என்று சீன பெய்சிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் கல்லூரியின் பேராசிரியர் லீ ச்சு வெய் கருதுகிறார். அவர் கூறுகிறார். 

மருத்துவ கண்ணோட்டத்திலிருந்து குறிப்பாக எய்ட்ஸ் நோய் தடுப்பு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் முழு உலகமும் உண்மையை எதிர்நோக்கி போதை பொருள் உட்கொள்வோருக்கு ஒரு வகை மருந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அவர்கள் பொது ஊசியைக் கொண்டு போதை பொருள் உட்கொள்ளும் நடவடிக்கையை துண்டித்து அவர்களை எச் ஐவ கிருமி பிடிக்கப்படாமல் தடுப்பது என்பது அதன் நோக்கமாகும். மெத்தடோன் சிகிச்சை நிலையம் நிறுவது என்பது போதை பொருள் உட்கொள்வதால் தனிநபருக்கும் குடும்பத்தினருக்கும் சமூகத்துக்கும் விளைவிக்கும் தீஹ்கைக் குறைப்பதாகும் என்றார் அவர்.