• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-27 22:06:21    
நேயர் நேரம்51

cri
சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சி, பல நேயர்களைக் கவர்ந்துள்ளது. அது பற்றிய கருத்துக்கள் இதோ.

--இதில், சிறுப்பான்மை தேசிய இன கல்வி துறையின் வளர்ச்சி என்ற கட்டுரையை கேட்டறிந்தேன். சிறுப்பாண்மை தேசிய இன மக்கள் கல்வி பயில சீன அரசு எடுத்துவரும் நடவடிக்கையின் பயனாக, திபெத்தின் சாதாரன விவசாயி குடும்பத்தை சேர்ந்த மாணவர் மாணவிகள் கிழக்கு மற்றும் மத்திய சீனாவிற்கு வந்து, கல்வி பயில்வதையும் தெரிந்து கொண்டேன் என்கிறார் காசுக்காரன்பாளையம், D.நந்தகுமார்.

--சிறுப்பான்மை தேசிய இன மக்கள் தங்களது இன மொழி மற்றும் சீன மொழி என்ற இரண்டு மொழிகளை கற்கின்றனர். அதன் மூலம், அவர்கள் மற்ற மக்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்ற விவரங்களைத் தெரிந்துகொண்டேன் என்கிறார் மதுரை, S.திருநாவுக்கரசு.

--வடசீனாவிலுள்ள மங்கையர் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றார். சிறுவயது முதலே நல்ல கல்வி பயின்று, முதுகலை பட்டம் பெற்றவர். சீனாவில், கணிணி, தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம், கல்வி தொடர்ந்து வழங்கி வருவதைக் கேட்டறிந்தேன் என்கிறார், செஞ்சி P.வின்சென்ட்.

--இதில் சீனாவின் ஈ இன மக்கள் பற்றிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஈ இன மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, உணவு, மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்து கொண்டோம் என்கிறார் வாகரயாம்பாளையம், D.மோகன்குமார்.

சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சிக் கேளும் போது, சீனாவின் புகழ்பெற்ற இயற்கை காட்சித்தலங்களிலும் வரலாற்று சிறப்பிடங்களிலும் கண்கூட்டாக சென்று பார்த்தது போன்றதாக, நேயர்கள் பலர் தெரிவித்தனர்.

--XIA MEN நகரில் சுற்றுலா வசதிகள் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். கண்ணையும் கருத்தையும் கவரும் எழில் மிக்க இயற்கைக் காட்கித் தலமாகவும், பன்னாட்டு போக்குவரத்து மையமாகவும் விளங்கும் நகரம், XIA MEN ஆகும் என்பதை தெரிந்து கொண்டேன் என்கிறார், மணமேடு எம்.தேவராஜா.

--இந்நிகழ்ச்சியில், HANG ZHOU நகரம் பற்றிய தகவலை அறிந்த போது, நானும் அந்த நகரை சுற்றி பார்க்க உணர்வை தூண்டியது. இயற்கை அன்னையின் வரம் பெற்ற அற்புதமான இடமத்தை அறிந்துக்கொண்டதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்கிறார் 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.

--சீனாவில் சுற்றுலா பற்றி தெளிவாக வழங்கினீர்கள். சீனாவின் சுற்றுலாத்துறை சிறப்பாக செய்து, அதன் மூலம் பல நேயர்களை கவர்ந்து இழுத்து, அந்நிய செலாவணியை பெருக்குவது பெருமைக்குரியது என்கிறார் குருணிக்குளதுப்பட்டி, சி.முருகன்.

--சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடம் என்று கூறி பறவைகளின் குரலை ஒளிபரப்பி அசத்தி விட்டீர்கள். மேலும் கேட்க கேட்க பார்க்க வேண்டும் போல் ஆவலாய் உள்ளது. பூங்காவில் ஒரு மரம் கூட இதுவரை வெட்டப்பட வில்லை என்றதும், குண்டாக இருப்பவர் கவலைப்பட கூடிய ஒரு இடம் உள்ளது என்கிறார் மறைமலைநகர், சி.மல்லிகாதேவி.

இனி, எமது ஒலிபரப்பு பற்றிய பல்வேறு கருத்துகள்.

--தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பைக் கேட்கும் போதெல்லாம், புது உணர்வு பத்துணர்ச்சி சந்தோஷம் தருகிறது. பல நல்ல தலைப்புகளில் புதுபுது நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவது புதுதெம்பு தருகிறது. பெண்களுக்கான அழகு சாதனங்களை எப்படி பயன்படுத்துவது பெண்களுக்கான மருத்துவ முறை யோசனைகள் ஆகியவற்றை ஒலிபரப்ப கோருகிறேன் என்கிறார் ஆரணி, J.A.லைலா.

--நிகழ்ச்சியில் மாற்றங்கள் கொண்டுவந்தமைக்கும் குறிப்பாக ஞாயிறு தோறும் நேயர் விருப்பம் கொண்டுவந்தமைக்கும் மிக்க நன்றி. அதிலும் குறிப்பாக அதிக கடிதங்கள் எழுதும் நேயர்களுக்கு முதல் பாடல் ஒலிபரப்புவது மிகவும் வரவேற்க தக்கது என்கிறார் காடாம்புலியூர் S.R.விஜயராகவன்.

--செப்டம்பர் 10ம் நாள், சீன ஆசிரியர் திணமாகும். எங்களுக்கு சீன மொழி கற்றுத்தரும் போது, ஆசிரியர் சுந்தரம் அவர்கள் ஆசிரியரோடு சேர்ந்து வாசியுங்கள். என்பார் எங்களுக்கு நீ ஹாவ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் சுந்தரம் அவர்களுக்கு சியே சியே. எங்களுக்கும் சீன ஆசிரியர் உண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி என்று, விழுப்புரம், எஸ்.பாண்டியராஜன் தெரிவித்தார்.

--சீன மகளிர் நிகழ்ச்சியில், மூதாட்டி மியாங்சிங்பா பற்றி கூறக்கேட்டேன். காகித கத்தரிப்பு கலையில், சிறந்து விளங்கும் இவர், 87 வயதை உடையவர். குள்ளமாணவர் சற்று பருமனாவர் என்றும் இவர் காகித கத்தரிப்பு கலைக்காக பரிசீனை வென்று வருவது பற்றியும் இன்றைய செய்தி மூலம் அறிந்துகொள்ள முடிந்தது என்கிறார் நெய்வேலி, A.M.சுப்ரமணியன்.