ஹாங்காங் பொருளாதாரத்துக்கு CEPAயின் பங்கு
cri
கடந்த ஓராண்டில் நடைமுறைக்கு வந்துள்ள "சீனப்பெருநிலப்பகுதி-ஹாங்காங் பொருளாதார வர்த்தக உறவு ஏற்பாடு" (CEPA), ஹாங்காங் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் தொழில், வணிக மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் பணியகத்தின் தலைவர் Zeng Jun Hua கூறியுள்ளார்.கடந்த ஒராண்டில், ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 விழுக்காட்டை எட்டியுள்ளது. 2004ஆம் ஆண்டு இறுதி வரை, CEPA மூலம் சீனப் பெருநிலப் பகுதி இறக்குமதி செய்த ஹாங்காங்கில் தயாராகும் சுங்க வரியில்லாத பொருட்களின் மொத்த மதிப்பு 115 கோடி ஹாங்காங் டாலரை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் நாள் முதல், இரண்டாவது கட்ட CEPA ஏற்பாடு, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஹாங்காங் பொருளாதாரத்தின் வளர்ச்சியை இது மேலும் விரைவுபடுத்தும் என்று Zeng Jun Hua தெரிவித்தார்.
|
|