சீனாவின் சமகால இலக்கிய அரங்கில், ZHAO BO அம்மையார், திறமை மிக்க எழுத்தாளராக கருதப்படுகின்றார். கடந்த சில ஆண்டுகளில், அவர், பல நாவல்கள், சிறு கதைகள் ஆகியவற்றை அடுத்துத்து எழுதி வெளியிட்டுள்ளார். அவை, வாசகர்களிடையில் எதிரொலிப்பை ஏற்படுத்தியுள்ளன.
எழுத்தாளரான அழகி ZHAO BO, சிவப்பு நிறமுடையவர். ஏரி நீர் போன்ற கண்ணுடையவர். சுத்தமான இயற்கை குணமும், சாந்தமான செயலும் எமது செய்தியாளரை முக்கியமாகக் கவர்ந்தன.
33 வயதான ZHAO BO, சீனாவின் சியாங்சு மாநிலத்தில் பிறந்தார். அவருடைய தந்தை, ஒரு தொழிலாளி. அவருடைய அம்மா, ஆசிரியராவார். அம்மாவின் செல்வாக்கினால், குழந்தைக் காலத்திலிருந்து, அவருக்கு புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது. அவர் கூறியதாவது:
அப்பொழுது, நிம்மதியாக இருப்பதற்காக, ஒரு புத்தகத்தை எடுத்துபடிக்க தொடங்கி விடுவேன். எந்த பத்திரிகை அல்லது நாவலைப் படிக்கும் போது, அரை நாள் கழிந்துவிடும் என்றார் அவர்.
குழந்தைக்காலத்தில் முதல், ZHAO BO சுதந்திரத்தை விரும்பி, நேரம் இருந்தால், கட்டுப்பாடற்ற சிந்தனை செய்கின்றார். புத்தகத்தைப் படித்த போது, அவர் அடிக்கடி நிறுத்தி, அதிலுள்ள கபுதா முடிவுக்கு எதிராகச் சிந்திக்கத் தொடங்கி விடுவார். இதுவே, எதிர்காலத்தில் தாம் நாவலை எழுதுவதற்கு காரணமாகும் என்று, அவர் கூறினார்.
இடைநிலைப் பள்ளியில் படித்த போது, அவருடைய கவிதை, நாவல், உரைநடை ஆகியவை வெளியிடப்பட்டன. கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டின் துவக்கத்தில், அவர் ஷாங்காய் சென்று, நண்பர்களுடன் வீட்டுமனை விற்பனை வணிகத்தில் 5 ஆண்டுகள் ஈடுபட்டார். 1995ம் ஆண்டு வரை, அப்போது ஷாங்காயில் புகழ்பெற்ற விமர்சகர் வூ லியாங்கைச் சந்தித்தார். இந்த சந்திப்பால், ZHAO BO இலக்கிய இயற்றும் பாதையில் உண்மையாக அடிஎடுத்து வைக்கத் துவங்கினார்.
வூ லியாங்குடனான பல முறை சந்திப்பு, ZHAO BOவை இலக்கிய சூழலில் ஈர்த்துக் கொண்டது. சுறுச்சுறுப்பாக வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது பிடிக்காமல், எழுதுவதே, தமது உள்ளத்தில் உண்மையாக விரும்பும் பணியாகும் என, ZHAO BO கண்டுபிடித்தார். அவர் கூறியதாவது:
இலக்கியத்தை நன்கு கற்ற வூ லியாங் அவர்களுடன் பேசியதால், இந்த உலகம், எனக்கு உண்மையாக தேவைப்படுவதாக, மீண்டும் கண்டுபிடித்தேன் என்றார் அவர்.
1996ம் ஆண்டு முதல், ZHAO BO மீண்டும் எழுதத் துவங்கினார். இதுவரை, அவர் உள்நாட்டின் பல்வேறு செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் மொத்தம் 8 லட்சம் எழுத்துக்களுடைய நாவல்கள் மற்றும் உரைநடைகளை வெளியிட்டுள்ளார். "காதல் உணர்ச்சிகள்","போலிமயிருடன் துக்கமானவர்", "காம வாழ்வு","நிழலுருவ காதலி"உள்ளிட்ட பல நாவல்களையும் சிறு கதைகளையும் வெளியிட்டுள்ளார்.
தமது நாவலில், ஆண்கள் மற்றும் பென்களின் எழுச்சி உணர்வு பற்றி, வருணித்து, ஒழுங்கான, அழகான, சுதந்திரமான உணர்வு மாளிக்கையை நிறுவ பாடுப்பட்டார். 1999ம் ஆண்டில் வெளியிட்ட "காதல் உணர்ச்சிகள்"எனும் நாவல், அவருடைய முக்கிய படைப்பு ஆகும். இந்த நாவல், வாசகர்களுக்கு சோர்வு தந்தது. இதில், துன்பமான உணர்ச்சிவசப்படும் 9 காதல் கதைகள் இடம்பெற்றுள்ளன. தனிச்சிறப்பான கருத்தின் மூலம், நகரத்தில் வாழும் மகளிரின் மனநிலையை ஆழமாக தோண்டி வெளிப்படுத்தினார். அவருடைய படைப்புகளிலுள்ள கதாநாயகர், பிரகாசமானவர். தமது மிதவாதம் மற்றும் எதிர்மறுப்பு எழுத்துக்களால், மனோவசிய நித்திரையில் வாசகர்களை ஈடுபடுத்திய ZHAO BO, எழுத்துகளில் அன்பையும் துயரத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால், அவர் விமரிசனம் செய்து, மதிக்கப்பட மாட்டார். தமது படைப்பு, மதிப்பீடு அல்ல, மனத்துக்கான ஆறுதல் தான் என்றார் அவர். இந்த நாவல், இணையத்தளத்தில் மிகவும் வரவேற்கப்பட்டது. வரவேற்கப்படும் படிப்பு பட்டியலில், முதலிடம் பெற்றுள்ளது.
காதல் கதையை விட, உண்மை வாழ்வில் வேறுபட்ட கதைகளை எழுதிய அவர், பொது மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை வித்திலப்பதில், விருப்பம் கொண்டார். திரு HE அவர்களின் சரித்திரம் எனும் நாவலை, உண்மையான நிகழ்ச்சிக்கிணங்க ZHAO BO இயற்றினார். இந்தக் கதையில், திரு HE ZHONG, நேர்மையுள்ளவர். அவருடைய மனைவி, கொடூரமான பெண். மாமியார், அடிக்கடி மனைவியுடன் சச்சரவிட்டு வருகின்றார். திரு HE 40 வயதாகும் போது, மாமியர் உயிரிழந்தார். சற்று பின்பு, திரு HEவும், காலமானார். வீட்டில், அவரின் மனைவி, தனியாக தங்கியிருந்தார். ZHAO BO வின் அமைதியான கூற்றில், வாசகர்கள், உண்மை வாழ்வில் உள்ள கசப்பையும், வெறுப்பையும் உணர்ந்து, குடும்பப் பிரச்சினைக்கான சோதனைகளை மேற்கொள்ளலாம்.
அவருடைய படைப்பு, ஆழமான நிலையை எட்ட விரும்பாமல், எதிராக, சாராம்ச ரீதியான, எளிதான உணர்ச்சியை, வெளிப்படுகிறது. மிகைப்படுத்துதல் இல்லாத அமைதியான இந்த எழுத்துகளில், இலக்கிய யோசனைகளைக் காணலாம். நேர்மையான மனப்பான்மையுடன் எழுதினால், நல்ல படைப்பை இயற்ற முடியும் என்று, ZHAO BO கருதினார். அவர் மேலும் கூறியதாவது:
சிறப்பான எழுத்தாளராக, உணர்ச்சிப்பூர்வமாக எழுத வேண்டும் என்பது, என்னுடைய விருப்பம். ஒரு எழுத்தாளர், எழுத்துக்களில் யோசனை செய்து, உண்மை உணர்ச்சியை வழங்க வேண்டும் என்றார் அவர்.
வாழ்வில், எழுதுவதைத் தவிர, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, திரைப்படத்தைப் பார்ப்பது, அவருக்கு மிகவும் விருப்பமானது. குறிப்பாக, இலக்கியமயமான படங்கள், அவரை மிகவும் கவர்ந்துள்ளன.
|