• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-28 17:30:14    
பேரீச்சம் பழ இனிப்பு

cri

அ—வீட்டுக்கு விருந்தினர் வந்தவிட்டால், எப்படியாவது ஒரு இனிப்பு தயாரித்து விடுகிறோம். இல்லா விட்டால் கிடைக்கு ஓடிப்போயாவது ஒரு இனிப்பு வாங்கி வருகிறோம்.

அறுசுவை விருந்தில் இனிப்பு முக்கியம் இல்லையா?

இ—இனிப்பு இல்லாமல் திண்டாட வேண்டாம் என்பதற்காக இன்று ஒரு இனிப்பு தயாரிக்கும் முறை பற்றிச் சொல்வேன்.

அ—என்ன இனிப்பு?

இ—பேரீச்சம் பழ இனிப்பு.

அ—பேரீச்சம் பழமே இனிப்பானது. அதை வைத்து ஒரு இனிப்பு தயாரிப்பா? சுவையாகத் தான் இருக்கும். சொல்லுங்கள்.

இ—பேரீச்சம் பழம் பற்றிய சீனாவின் சிறப்பான இனிப்பு பற்றி கூறுவேன். சீன பேரீச்சம் பழம், சிவப்பு நிறம் உடையது. இது, சீன மக்களுக்கு மிகவும் பிடிக்கும். கடந்த ஆண்டு, நான் தமிழகத்தில் பயணம் மேற்கொண்ட போது, சில நேயர்களின் வீட்டில் பல தமிழ் இனிப்புகளை உண்டேன். இன்று, அறிமுகப்படுத்தும் சீன இனிப்பு, தமிழகத்தின் இனிப்பில் இருந்து வேறுபட்டது.

அ—அப்படியா. இனி, பேரீச்சம் பழம் இனிப்பு வறுவல் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும். சொல்லுங்க.

இ—பேரீச்சம் பழம், 350 கிராம்

சர்க்கரை, 100 கிராம்

பசை அரிசி மாவு, அரை கோப்பை

அ—சரி, இந்தப் பொருட்கள் உடனே கிடைக்கும். எல்லாம் தயாராக இருக்கிறது. கலைமகள், இனி எப்படி இனிப்பு செய்தது சொல்லுங்கள்.

இ—தயாரிப்பு முறை மிக எளிது. முதலில், பேரீச்சம் பழத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு, கத்தியினால், பேரீச்சம் பழத்தை நடுவில் கீற வேண்டும்.

அ—சரி, பேரீச்சம் பழத்திலுள்ள கள்களை நீக்குவதற்காக இப்படி கீற வேண்டும், அப்படித்தானே?

இ—அதற்கு மட்டுமல்ல. பிறகு, இந்த கீறலுக்குள், வேறு பொருளையும் வைக்க வேண்டும்.

அ—அப்படியா! அடுத்து என்ன செய்யலாம்?

இ—இனி, பசை அரிசி மாவில் சுடு நீரை சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை, பேரீச்சம் பழத்தின் நீளத்தைப் போன்ற துண்டுகளாக செய்ய வேண்டும். இப்போது, மாவு துண்டுகளை, பேரீச்சம் பழத்தின் கீறலுக்கு இடையில் தனித்தனியாக வைக்கணும்.

அ—சரி. ஒவ்வொரு பேரீச்சம் பழத்திலும் ஒரு பசை அரிசி மாவு துண்டு, வைக்கப்பட்டு விட்டது. அப்படியே தட்டில் வைக்கலாமா?

இ—ஆமாம். இனி, வாணலியை அடுப்பின் மீது வைக்கவும். சர்க்கரை மற்றும் குளிர் நீரை வாணலியில் விட்டு கொதிக்கவிட வேண்டும். நீர் ஊற்றிய பிறகு, பேரீச்சங்களை வாணலியில் வைத்து, இணைந்து வேக வைக்கவும்.

அ—இந்த இனிப்பு தயாரிப்பதற்கு, எவ்வளவு நேரம் தேவைப்படுக்கிறது?

இ—தீயை லேசாக எரியவிட்டு, சுமார் 30 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

அ—சீன பேரீச்சம் பழ இனிப்பு தயார். சிவப்பும் வெள்ளையும் கலந்த காட்சிதரும் நிறத்துடன் இந்த இனிப்பு, கண்டிப்பாக சுவையாக இருக்கும் என நம்புகின்றேன்.

இ—ஆமாம். இந்த இனிப்பின் நிறமும் நன்றாக இருக்கறது சுவையும் நன்றாக இருக்கும். எளிய முறையில், தயாரிக்கப்படும் இந்த இனிப்பு, சீன மக்களுக்கு எப்பொழுதும் விரும்பானது.