• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-28 23:21:18    
நேயர் நேரம்52

cri
முதற்கண், எமது ஒலிபரப்புக்கு உதவியையும் ஆதரவையும் வழங்கும் பல நேயர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். உங்களின் முயற்சியுடன், உங்கள் குரல் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் மேலும் அதிகமான நேயர்களைக் கவர்ந்துகொள்ள முடியும். அடுத்து, நேயர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

--இந்நிகழ்ச்சியில், நமது சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு ஒரு மணி நேர நிகழ்ச்சியாக மாற்றம் செய்தமை நிறைய நேயர்கள் மிகவும் வரவேற்று பேசினர்கள் என்கிறார் சென்னை 44, கே.அமுதா.

--திருச்சி மாவட்ட நேயர்களான செந்தில், சேந்தமங்கலம் S.M.ரவிச்சந்திரன் தமிழ்த்தென்றல் சீன வானொலி நேயர் மன்றம் வழங்கிய உங்கள் குரல் நிகழ்ச்சியில், சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி தெளிவாக அறிய முடிந்தது என்கிறார் வாதானூர், M.விநாயகமூர்த்தி.

--நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் சார்ப்பில், இவ்வாண்டு இலவச சீனப் பயணம் மேற்கொண்ட பகளாயூர் P.A.நாச்சிமுத்து அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, அதன் ஒலிப்பதிவு நிகழ்ச்சியை, இன்றைய நிகழ்ச்சியில் கேட்டேன். நன்றாக இருந்தது என்று, நெய்வேலி A.M.சுப்ரமணியன் தெரிவித்தார்.

--ஆரணி கங்கா யாங்சி சீன வானொலி நேயர் மன்றம் 15வது கருத்தரங்கு பற்றி பல நேயர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்தார். அவர்களுக்கும் சீன வானொலிக்கும் எனது பாராட்டுக்கள் என்கிறார் மேல்மாயில் V.ரங்கோலி ராதாகிருஷ்ணன்.

--நேயர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், நேயர்களின் விருப்பங்களை பற்றி நிகழ்ச்சிகளின் சிறப்புகளை பற்றியும் எல்ல சீன வானொலி நேயர்களும் அறித்துக்கொள்ளும் வகையிலும் வாய்ப்பு தந்த சீன வானொலிக்கு மிக்க நன்றி என்று, மதகடிப்பட்டு புதிய நேயரான பா.தெய்வா தெரிவித்தார்.

--நாமக்கல் மாவட்ட நேயர் மன்றம் பதிவு செய்த உங்கள் குரல் நிகழ்ச்சியைக் கேட்டேன். பகளாயூர் P.A.நாச்சிமுத்து அவர்கள் சீன சென்ற முன்னிட்டு நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல நேயர்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அறிய முடிந்ததது. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்கிறார், காசுக்காரன் பாளையம் டி.நந்தகுமார்.

--இதில், கனேசன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியைக் கேட்டு பயன்பெற்றேன். உங்கள் குரல் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான செய்தித் தொகுப்பு அநஅறைய உலக செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்கியது பாராட்டும் படி இருந்தது பாராட்டுக்கள் என்கிறார் சாத்தூர், சி.மனோகரன்.

மலர்சோலை நிகழ்ச்சி பற்றிய அதிகமான கடிதங்கள் கிடைக்கப்பெற்றோம்.

--மலர்சோலை நிகழ்ச்சியைக் கேட்டேன். உலக சுற்று சூழல் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுவது, கடலை மாசுவிலிருந்து பாதுகாத்தல், மாசு ஏற்படாமல் இருக்க, சீனாவில் குழந்தைகளில் சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி கற்பிப்பது ஆகியவை, ஒரு நல்ல முயற்சி என்கிறார் பரசலூர், P.S.சேகர்.

--1921ம் ஆண்டு ஜூலை திங்கள் 1ம் நாளன்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்ப்டடு மார்க்ஸிச பிரச்சாரம் செய்யப்பட்டதும், அதன் மூலம் சீன மக்கள் தற்போது ஒளிமயமான பாதையில் பயணித்து கொண்டு இருப்பதையும் கேட்டோம். ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கை வளர்ச்சியின் பின்னணியில் ஒரு தேசிய கட்சியின் கவனம் பதிக்கப்ட்டுள்ளது என்கிறார் செல்லூர் என்.சீனிவாசன்.

--இதில், ஒலிம்பிக் போட்டி வரலாறு பற்றி கேட்டேன். கோடை, குளிர்கால போட்டியாக 1896ம் ஆண்டில் தொடங்கியது. இது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2008ம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தும் பல ஏற்பாடுகளை சீன அரசு செய்து வருகிறது என்பதை கேட்டறிந்தேன் என்கிறார் செஞ்சி பி.வின்சென்ட்.