2005ல் சீனப் பொருளாதாரம்
cri
இவ்வாண்டு சீனாவின் பொருளாதாரம் பொதுவாக சீராகவே உள்ளது. அதன் ஆண்டு வளர்ச்சி விகிதம், சுமார் 8.5 விழுக்காடாகும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் சீன பிரதிநிதியான பொருளாதார அறிஞர் சுவான் சியென் கூறியுள்ளார். நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு சீனாவின் முதலீடு மற்றும் ஏற்றுமதி இறக்குமதியின் அதிகரிப்பு வேகம் குறையும் என்றார் அவர். தற்போது எரி ஆற்றல், ஓரளவு உற்பத்திப் பொருட்கள் போக்குவரத்து ஆகியவற்றில் இன்னும் விநியோகப் பற்றாக்குறை நிலவுகின்றது. இது பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது என்றார் அவர். வளர்ச்சி வேகம் தாமதப்படுவதால், சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சியில் நிலவும் முரண்பாடுகள் குறைந்து, சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைய முடியும் என்றும் சுவான் சியென் குறிப்பிட்டார்.
|
|