மேற்குப்பகுதிக்கான வளர்ச்சிப்பணிகள்
cri
கடந்த ஆண்டு, சீனாவின் மேற்கு பகுதியின் வளர்ச்சிக்காக, பல்வேறு பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்றன. மேற்குப் பகுதியில், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி விரைவாக ஏற்பட்டுள்ளது என்று Xin Hua செய்தி நிறுவனம் இன்று வெளியிட்ட விமர்சனம் கூறுகிறது. கடந்த ஆண்டு, மேற்குப் பகுதியின் மொத்த உற்பத்தி மதிப்பு, 2003ஆம் ஆண்டு இருந்த 11.3 விழுக்காட்டு வளர்ச்சியை விட அதிகமாகும். மேற்கு பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்த பின், மிக உயரிய வளர்ச்சி வேகம் இதுவாகும் என்று விமர்சனம் கூறுகின்றது. கடந்த ஆண்டு, மேற்குப் பகுதியின் பொருளாதாரத்தில் காணப்பட்ட சீரற்ற நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிகையான எரியாற்றல் நுகர்வும், சீர்கேடும் மிக்க திட்டப்பணிகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இப்பகுதியின் உயிரினச் சூழலை மேம்படுத்தும் வகையில், முக்கிய உயிரின வாழ்க்கை கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
|
|