• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 09:17:31    
விளையாட்டுச் செய்திகள்

cri

22வது உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி ஜனவரி 22ஆம் நாள் ஆஸ்திரியின் இந்ஸ்புருக்கில் நிறைவடைந்தது. 12ஆம் துவங்கிய இப்போட்டியில், பத்து விளையாட்டுகளுக்கான 69 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆஸ்திரியா 10 தங்கம், 8 வெள்ளி, மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் பெற்றது. சீன அணி, மொத்தம் 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை பெற்று 9ஆம் இடம் வகிக்கின்றது. 23வது பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி 2007ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் இத்தாலியின் துலிங் நகரில் நடைபெறும்.

ஜனவரி திங்கள் 28ஆம் நாள் சீனாவின் பூஜியன் மாநிலத்தின் ச்சுவான் சோ நகரில் நடைபெற்ற நான்கு நாடுகளின் கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீன அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்தது.

2005ஆம் ஆண்டு கோடைகால பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் திங்களில் துருக்கியின் இஸ்தாம்புல் நகரில் நடைபெறும். இப்போட்டிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது என்று சீனப் பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் யாங் லி கோ 22ஆம் நாள் தெரிவித்தார். நீர் குதிப்பு, வாட் போட்டி ஆகிய இரண்டு விளையாட்டுகளில் சீன விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு உண்டு.

2011ஆம் ஆண்டு உலக பல்கலைக் கழக மாணவர் கோடை கால விளையாட்டுப் போட்டியை நடத்த சீனாவின் சென்சென் நகரம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விண்ணப்பிக்கும் நாள் 2007ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் வரை. 2007ஆம் ஆண்டு துலிங் உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் போது, சர்வதேச பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு சம்மேளனத்தின் செயல் கமிட்டி 2011ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரைத் தீர்மானிக்கும் என்று தெரியவருகின்றது.

21ஆம் நாள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் ஒப்பன் போட்டியின் மகளிருக்கான மூன்றாவது சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனை லீ நா 0-2 என்ற செட் கணக்கில் 4வது விதை வீராங்கனை மரியா. ஷாராப்போவாவிடம் தோல்வி கண்டார். இதுவரை, இந்த போட்டியில் கலந்துகொண்ட சீன வீராங்கனைகள் அனைவரும் தோல்வியுற்று போட்டியிலிருந்து விலகினர். சீனாவின் 5 விளையாட்டு வீராங்கனைகளில் லீ நா மட்டும் 32 வலுவான விளையாட்டு வீராங்கனைகளில் நுழைந்தார். 24ஆம் நாள் நடைபெற்ற மகளிருக்கான இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனை பொங் சுவய் சீனத் தைபெய் வீராங்கனை லீ ஹுய்ச்சி ஜோடி, செக் நாட்டின் ஒரு ஜோடியிடம் தோல்வி கண்டனர். சீனாவின் மற்றொரு ஜோடியான லீ திங் திங்-சுன் தியன்தியன் இருவரும் ரஷிய வீராங்கனைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.