• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 09:53:05    
விளையாட்டுச் செய்திகள்

cri

2005ஆம் ஆண்டு ஊக்க மருந்து எதிர்ப்புக்கான பரிசோதனையையும் தண்டனையையும் சீனா தொடர்ந்து வலுப்படுத்தும். பத்தாவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊக்க மருந்து பரிசோதனைக்குட்படும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 9வது சேசிய விளையாட்டு போட்டியில் இருந்ததை விட 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிக்கும். தவிரவும், 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஊக்க மருந்து பரிசோதனைக்கான ஆயத்த பணியை சீன ஊக்க மருந்து பரிசோதனை மையம் இவ்வாண்டு உரிய நேரத்தில் துவக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஊக்க மருந்து எதிர்ப்புப் பணியில் பெரும் சாதனை சீனா பெற்றுள்ளது. சிட்னி மற்றும் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீனப் பிரதிநிதிக் குழு முறையே 28 மற்றும் 32 தங்கப் பதக்கங்களை பெற்றது. அத்துடன் சீன விளையாட்டு வீரர் எவரும் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை. சீனாவின் ஊக்க மருந்து எதிர்ப்பு பணி உலக பாராட்டை பெற்றுள்ளது.

தற்போது, உலகின் ஊக்க மருந்து எதிர்ப்பு பணியின் நிலைமை குறித்து தாம் நம்பிக்கை ஆர்வம் கொள்வதாக உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் தலைவர் பங்தே அண்மையில் தெரிவித்தார். பிரசல்சில் நடைபெற்றுவரும் விளையாட்டு ஒழுக்கம் பற்றிய ஆய்வு கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். உலகில் அனைத்து நாடுகளும் அனைத்து விளையாட்டுகளிலும் ஒரே மாதிரி ஊக்க மருந்து எதிர்ப்பு விதிகளை செயல்படுத்தத் துணைபுரிவது என்பது எனது கனவாகும் என்றார் அவர். இந்த நிறுவனம் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை சுமார், இரு நூறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகள் இந்த விதிகளில் கையொப்பமிட்டன.

ஜனவரி 29ஆம் நாள் ஐரோப்பிய இசை நடன பனிச்சறுக்கல் சாம்பியன் பட்டப்போட்டி இத்தாலியின் துலிங் நகரில் நடந்தது. மகளிருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் பிரிட்டிஷ் வீராங்கனை ஜெனா. கல்கர், சுவீட்சர்லாந்து வீராங்கனை சாலா.மெல், ஸ்பெனிஷ் வீராங்கனை பெல்னந்தெஸ், உக்ரைன் வீராங்கனைகள் எலென-லியசென்கோ, கலியானா-மலியாசிந்கோ, ஹாங்கேரி வீராங்கனை தியானா-போத், ரஷிய வீராங்கனைகள் இலியன்நா-ஸ்லுஸ்காயா, எலெனா-கோலொகோவா முதலிய புகழ்பெற்ற வீராங்கனைகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

2005ஆம் ஆண்டு சீனக் கால்பந்து துறை 2008ஆம் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணித் திட்டதைத் துவக்கும். இந்த விளையாட்டுப் போட்டியில் குறிப்பிடப்பட்ட சாதனை பெற பாடுபடும். சீனக் கால்பந்து சங்கத்தின் சிறப்பு உறுப்பினர் கூட்டத்திலிருந்து எமது செய்தியாளர் 19ஆம் இதை தெரிவித்தார். திட்டமிட்ட படி, சீனக் கால்பந்து சங்கம், மேம்பாட்டு வளங்களைத் திரட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆண், பெண் கால்பந்து அணிகளின் ஆயத்த பணி சீராக நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும்.