• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 08:10:39    
நேயர் விருப்பம்53

cri
2 12 04 அன்றைய ஒலிபரப்பில் இடம் பெற்ற அறிவியல் உலகம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு எந்த நேரத்தில் எந்த வகையான உடற்பயிற்சியை எந்த காலங்களில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வலிப்பு நோய்க்கு தாயத்தால் எந்த வித பயனும் இல்லை என்றும் வெறும் மூட வேறும் நம்பிக்கை மட்டும் இந்த நோயை குணப்படுத்த முடியாது என்றும் விளக்கமாக எடுத்து வைத்தீர்கள். இன்னமும் சில கிராமங்களில் இது மாதிரியான மூட நம்பிக்கையை வளர்க்க சிலர் இருக்கதான் செய்கிறார்கள். மக்கள் மனம் மாறும் வரை இது போன்ற மூட நம்பிக்கையை ஒழிக்க முடியாது என்று வேலூர் மோகன்குமார் தெரிவித்தார். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சீன உணவுப்பண்பாடு குறித்து ந.கடிகாசலம் விளக்கினார். பொதுவாக, சீனர்கள் அசைவு உணவுப் பிரியர்கள் என்பது நாங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். காரமான உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். இது குறித்து அங்கு வழக்கத்தில் உள்ள நான்கு காலகள் உள்ளதில் நாற்காலி மேஜை தவிர எல்லாமே உண்பதற்கு ஏற்றது என்று பழமொழியையும் கூறியதற்கு நன்றி. நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சொற்ப விலையில் கிடைக்கும் கீரைகளின் அரிய மருத்துவ குணங்களை பாண்டவமங்கலம் தியாகராஜன் அவர்கள் கூறக் கேட்டேன். சிறு தொகை கொடுத்து கீரைகள் வாங்கி சாப்பிடாவிட்டால், எதிர்காலத்தில் மருத்துவச் செலவுக்காக பெரும் தொகை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். அனைத்துமே பயனுள்ள தகவல்கள் தியாகராஜன் அவர்களுக்கும் நன்றி. மகௌ தன்னாட்சி பிரதேசத்தில் ஒரு நாட்டில் இரண்டு ஆட்சி முறை என்பது காலம் சென்ற தீனத் தலைவர்களின் தத்துவமாகும். இது மகௌ பிரதேசத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. சிறப்பானது. இதன் அடிப்படையில் மகௌ பொருளாதாரம் முன்னேர்றம் கண்டு வருகிறது என மகௌ தன்னாட்சி நிர்வாக அதிகாரி கூறியது பாராட்டுக்குரியது. மகௌவில் புதிய ஆட்சி முறை சிறப்பாக இருப்பதாக அதிகாரி கூறியதை அறிந்தேன் என்று முனுகப்பட்டு பி கண்ணன் சேகர் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் குறிப்பிட்டார். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கடிகாசலம் இறைச்சி உணவிறகு இன்று விடுமுறை என்று கூறிய உடனே என் மனதிற்கு உற்சாகம் ஏற்பட்டது மிகவும் கூர்ந்து கவனித்தேன் வேர்கடலை அவியில் புதுமையான உணவு வகை நல்ல முரையில் சமைத்து உண்டால் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம். வாசனை மணம் சேர்ப்பதற்காக வழி செய்து இருக்கலாம் இதைப் போன்ற உணவு வகைகளை தொடந்து ஒலிபரப்பு வேண்டுகிறேன். மூன்று நிகழ்ச்சிகள் இறைச்சி பிரியர்களுக்காகவும். ஒரு நிகழ்ச்சி சைவபிரிவினருக்காகவும் மாறி மாறி ஒலிபரப்பலாம். இரு தரப்பு உணவு பிரியர்களையும் நிறைவு செய்யலாம் என பதில் சிறிதும் ஐயமில்லை என்று சேந்தமங்கலத்திலிருந்து வ வசந்த் கடந்த ஜூலை திங்களின் கடிதங்களில் யோசனை தெரிவித்தார். சீன மகளிர் நிகழ்ச்சியில் 83 வயதான சாங்லி அம்மையார் பற்றி கூறப்பட்டது. இவர் மாடலிங் துறையில் பயிற்சி பெற்று சிறப்பு பரிசை பெற்றிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை சுருக்கமான உதாரணமாக காட்டியது மிக அருமை. நாம் வாழ்க்கை கண்ணாடி போன்றது நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும் நாம் அழுதால் அதுவும் அழும் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை கண்ணாடிக்கு ஒப்பிட்டு அனைவருக்கும் எளிதாய் புரியச் செய்தார். தன்னுடைய 83 ஆண்டுகால அனுபவத்தை ஒரே வரியில் கூறி விட்டார். நான்கு தலைமுறைகளாக நான் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார் என்று சேந்தமங்கலம் வி பாலகிருஷ்ணன் தமது கடந்த ஜூன் திங்கள் தெரிவித்தார். சீன அரசாங்கப் பணியறிக்கையில் தி கலையரசி அவர்கள் மொழிபெயர்ப்பாளர் சிறப்பாக, மொழி பெயர்த்துள்ளார் பாராட்டுக்கள். ஆனால் மிகவும் கடினமான சொற்கள். இது அவரின் தமிழ்புலமையின் தேர்ச்சி. இன்னும் எளிய சொற்கள் மூலம் மொழிபெயர்க்கலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்லை. சீன இந்திய வர்த்தகத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்திய மக்களின் நெடுநாள் எதிர்பார்பான சீன இரு சக்கர வாகணம் எதிர்வரும் நவ், டிசம்பரில் பல்வேறு தரத்திலும் மலிவு விலையிலும் கிடைக்கும் இடம் போன்ற பல முக்கிய தகவல்களை அறியப் பெற்றோம். வாகனம் வேண்டுவோருக்கு பயனுள்ள தகவல் அளித்த நேயர் இளங்கோவனுக்குப் பாராட்டுக்கள் மேலும் இது போன்ற தகவல்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியத் தரவேண்டுகின்றேன் என்று பரளச்சி அ காசிராஜன் தெரிவித்தார்.