• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 12:16:27    
யானைகளின் பேருதவி

cri

மனிதனுக்கு எப்போதுமே அகந்தை அதிகம். இறைவனுடைய படைப்பில் மனிதப் படைப்புத் தான் மிக உயர்ந்தது என்ற எண்ணம். இது உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவன் மர்ரவை எல்லாமே ஒரு படி தாழ்ந்தவை என்ற தற்பெருமை மனிதனுக்கு உண்டு. ஆனால் மனிதன் தனது ஆறாவது அரிவைப் பயன்படுத்துவிறானா மனிதன் பயன்படுத்துகிறானோ இல்லையோ விலங்குகள் தங்களுக்கு இளைவன் கொடுத்த அறிவை முழுமையாகப் பயன்படுத்துகின்றயன. மற்றவர்கள் பயன்பட அந்த அறிவைப் பயன்படுத்துகின்ரன.

யானைகளுக்கு அபாரமான நினைவாற்றல் உண்டு எனக்கூறுவார்கள். தேங்காய் சிரட்டையில் சுண்ணாம்பு தடவிக்கொடுத்து ஏமாற்றிய ஒருவனைத் தேடிப்பிடித்து ,அதுவரை சிரட்டையை வநாய்க்குள்ளேயே ஒதுக்கிவைத்திருந்து அந்தச்சிரட்டையை அவனுடைய தலையிலே வைத்து மிதித்துக்கொன்ற யானை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது கதைதான். ஆனால் அண்மையில் தாய்லாந்தில் நிலநடுக்கமும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்ட போது யானைகள் என்ன செய்தன தெரியுமா.

பொதுவாகவே விலங்குகளுக்கு முன்னறியும் திறன் அதிகம் என்று சொல்வார்கள். எமதூதர்கள் வருவது நாய்களுக்குத்தான் முதலில் தெரியுமாம். அதனால்தான் நடு இரவில் நாய்கள் ஊளையிட்டால் யாருக்கு மரணஓலையோ என்று கிராமத்தில் பயப்படுவார்கள். இப்போது யானைகலுக்கும் அந்த மாதிரி முன்னறியும் திரன் உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.தாய்லாந்தில் நிலநடுக்கம் கடலில் நிகழ்ந்தபோது காவோ லாக் கடற்கரையில் சுற்றுலாப்பயணிகளை சவாரி ஏற்றிக்கொண்டிருந்த சில யானைகள் பிளிறத்தொடங்கின என்று மாவுத்தர் டாங் சலாங்கம் கூறினார். முதலில் லேசாகப் பிளிறத் தொடங்கி ஓய்ந்துவிட்டன. பிறகு ஒருமணி நேரம் கழித்து பெரியபெரிய கடலஅலைகள் கரையைத்தாக்கத் தொடங்கியபோது அதற்குச்சற்று முன்னர் யானைகள் நிலைகொள்ளாமல் தவித்தன, பெருத்த குரலெடுத்து பிளிறத்தொடங்கின. மாவுத்தனும் அவனது மனைவியும் என்ன செய்தும் அவை கட்டுப்படவில்லை. மலைக்காடுகளை நோக்கி ஓடத்தொடங்கின.

அப்போது அந்த யானைகளின்மீது அமர்ந்திருந்த சுற்றுலாப்பயணிகள் உயிர்தப்பினார்கள். இந்தவகையில் சுமார் 3800 பேராவது காப்பாற்றப்பட்டார்கள். என்று சுற்றுலாப்பயணிகளை யானைமீது ஏற்றிவிட்டு பணம்சம்பாதிக்கும் விட் அனிவாட் என்பவர் கூறினார். சுற்றுலாப்பயணிகளை ஏற்றாமல் கட்டிப்போடப்பட்டிருந்த யானைகள் சங்கிலிகளை அறுத்துகொண்டு ஓடத்தொடங்கின. அவ்வாறு ஓடிய சில யானைகள் தங்கலது துதிக்கையை நீட்டி மக்கள் சிலரை வளைத்து இழுத்து முதுகின்மீது அமர்த்திக்கொண்டு ஓடின என்று மாவுத்தரின் மனைவி கூறினார்.