• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 11:24:29    
நேயர் நேரம்54

cri
சீன மகளிர் நிகழ்ச்சியில் 83 வயதான சாங்லி அம்மையார் பற்றி கூறப்பட்டது. இவர் மாடலிங் துறையில் பயிற்சி பெற்று சிறப்பு பரிசை பெற்றிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை சுருக்கமான உதாரணமாக காட்டியது மிக அருமை. நாம் வாழ்க்கை கண்ணாடி போன்றது நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும் நாம் அழுதால் அதுவும் அழும் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை கண்ணாடிக்கு ஒப்பிட்டு அனைவருக்கும் எளிதாய் புரியச் செய்தார். தன்னுடைய 83 ஆண்டுகால அனுபவத்தை ஒரே வரியில் கூறி விட்டார். நான்கு தலைமுறைகளாக நான் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார் என்று சேந்தமங்கலம் வி பாலகிருஷ்ணன் தமது கடந்த ஜூன் திங்கள் தெரிவித்தார். சீன அரசாங்கப் பணியறிக்கையில் தி கலையரசி அவர்கள் மொழிபெயர்ப்பாளர் சிறப்பாக, மொழி பெயர்த்துள்ளார் பாராட்டுக்கள். ஆனால் மிகவும் கடினமான சொற்கள். இது அவரின் தமிழ்புலமையின் தேர்ச்சி. இன்னும் எளிய சொற்கள் மூலம் மொழிபெயர்க்கலாம். இவ்வளவு சிரமப்பட வேண்டியது இல்லை. சீன இந்திய வர்த்தகத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்திய மக்களின் நெடுநாள் எதிர்பார்பான சீன இரு சக்கர வாகணம் எதிர்வரும் நவ், டிசம்பரில் பல்வேறு தரத்திலும் மலிவு விலையிலும் கிடைக்கும் இடம் போன்ற பல முக்கிய தகவல்களை அறியப் பெற்றோம். வாகனம் வேண்டுவோருக்கு பயனுள்ள தகவல் அளித்த நேயர் இளங்கோவனுக்குப் பாராட்டுக்கள் மேலும் இது போன்ற தகவல்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் அறியத் தரவேண்டுகின்றேன் என்று பரளச்சி அ காசிராஜன் தெரிவித்தார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் HIV நோயாளிகளுக்கு வைட்ட மின் செயலையும் உடல் நலத்தையும் கவனித்து வருகிறது என்ற செய்தியும் அறிந்தேன். தலைவலி உள்ளவர்களைப் பற்றி இன்று கூறப்பட்டது பல வகையான தலைவலிகளுக்கு நாள் தோறும் தண்ணீர் பருகுவதால் தலைவலி குறைய வாய்ப்பு உள்ளதை புரிந்து கொண்டேன். சீனாவில் பல வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில்களை நிறுவி உள்ளன இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுள்ளர்கல். பெய்சிங்கில் மக்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் சொகுசான கார்களையும் பயன்படுத்துகிறார்கள். அந்த கார்கள் ஒட்டி செல்ல பலவகையாக சாலைகளை பெய்சிங் மாநகரில் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் வரும் ஆண்டுகளில் சீனாவில் கார்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். தற்போது உள்ள கார்களே சீனாவில் மிகமிக அதிகம் என்று சேந்தமங்கலம் வி வசந்த் தமது செப்டம்பர் திங்களின் கடிதங்களில் தெரிவித்தார்.