• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-01 13:30:02    
நேயர் நேரம்55

cri
நல வாழ்வுப் பாதுகாப்பு எனும் நிகழ்ச்சியைக் கேட்டேன் அதில் கண்கோளாறுக்கு சிறந்த சிகிச்சை முறையான லாசிக் லேசர் சிகிச்சை முறை பற்றி குறிப்பிட்டீர்கள். இச்சிகிச்சை முடிந்த பிறகு கண்ணீர் அழுத்தம் வலி இருக்காது. கண்களை கசக்கக் கூட்டாது. இச்சிகிச்சையை வாகனமோட்டுபவர்கள், விளையாட்டுவீரர்கள் கலை உலகில் உள்ளவர்கள் செய்யலாம். இச்சிகிச்சைக்கு மொத்தமாக 20 நிமிடமும், 2500 ரூபாய் பணச் செலவும் நேவைப்படும். இவ்வாறான பல தகவல்களை தெரிந்து கொண்டேன் என்று இலங்கை நேயர் மு மு ஹம்தான் தமது புத்தாண்டு ஜனவரி திங்கள் முதலாம் நாள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி திங்கள் முதலாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியில் புத்தாண்டின் வாழ்த்துரையை நமது நேயர்கள் கூறினார்கள். சிறப்பாக இருந்தது. குறிப்பாக அதில் இந்திய சீன வானொலி நேயர் மன்ற தலைவர் எஸ் செல்வம் அவர்களின் புத்தாண்டு செய்தியும் மேலும் திருச்சி வி தி ரவிச்சந்திரன் அவர்களின் உரையும் மிகவும் அருமையான கருத்துடன் இருந்தது. ஜனவரி 3ம் நாள் சிறப்பு நிகழ்ச்சியில் நமது அறிவிப்பாளர்களின் அனைவருடைய புத்தாண்டு செய்திகளையும் வாழ்த்துரையும் ரசித்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது. இச் சமயத்த்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் காலம் கடந்து தெரிவித்து கொள்கிறேன் நன்றி என்று கண்டமங்கலம் நேயர் எ முஜீபர் ரஹ்மான் தமது கடிதங்களில் தெரிவித்தார். மக்கள் சீனம் நிகழ்ச்சியில் தரிசு நிலத்தை மிக பெரிய ஒரு கார்தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி கார் உற்பத்திகளில் முக்கிய மூன்று நாடுகளில் சீனாவும் ஒன்று என பெயர் வாங்கி உள்ளதையும் இதுவரை 20 லட்சம் கார்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ள சீன-பிரான்ஸ் கூட்டு நிறுவனம் செல்லோ கார் கம்பனிக்கு எங்களை அழைத்து சென்று கான்பித்த வான் மதிக்கு நன்றி கூறுகிறேன். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் இது வரை உலகில் சீன மொழியை கற்றவர்கள் 50 லட்சம் மக்கள் என்ற செய்தியும் 62 நாடுகளுக்கு சீன மொழியை கற்பிக்கும் ஆசிரியரை சீனா அனுப்பி உள்ளதையும் அறிந்தேன். சீன மொழியை கற்க இவ்வளவு பேர் ஆர்வத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி ஆகும். அறிவியல் உலகம் சார்ஸ் நோயின் மருந்து நிகழ்ச்சியில் சார்ஸ் நோயினை கட்டுபடுத்தும் மருந்து சீன அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்து இருப்பதும் இதன் முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்து உள்ளது என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் வானொலி மூலமாக புத்தாண்டு நலவாழ்த்துக்கள் தெரிவித்த அந்த குரலின் இனிமை நன்றாக இருந்தது மற்றும் பாடல் ஒன்று ஒலிபரப்பி எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. இந்த புதிய முயற்சிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.