• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-03 14:20:52    
குழந்தைகளின் பற்களைப் பாதுகாத்தல்

cri

வணக்கம் நேயர்களே. வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம் நேயர்களுக்கா குழந்தைகளின் பற்களைப் பாதுகாத்தல் பற்றி கட்டுரை எழுதி அனுப்பினார். இதை தொகுத்து இன்றைய நிகழ்ச்சியில் வழங்குகின்றோம்

தாய் வயிற்றில் குழந்தை வளர்ந்து வரும் போதே அதன் பற்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. ஆகவே உறுதியான பற்களுக்கு கருவுற்ற தாயார் அதிகமாக பால் அருந்த வேண்டும்.

குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் 6 வயதில் வெளிவர ஆரம்பிக்கின்றன என்றாலும் குழந்தை பிறந்த 2-3 திங்களிலேயே அவை உருப்பெறுகின்றன. இந்த வயதில் குழந்தைக்கு நிறைய பால் கிடைப்பதாலும் வைட்டமின் சொட்டு கொடுத்து வருவதாலும் பர்கள் நல்ல முறையில் அமைய வாயாப்பேர்பட்டு விடுகின்றது.

சர்க்கரையும் மாவுப் பொருட்களும் அடிக்கடி பற்களின் மேல் பட்டுக் கொண்டிருப்பதால் சொத்தை ஏற்படுகின்றது. சர்க்கரை மாவுப் பொருள் இவற்றால் செய்யப்பட்ட மிட்டாய் சாக்லேட்,ஸ பிஸ்கட் மற்றும் பலவகை இநிப்புப் பொருட்கள் பற்களில் பட்டுக் கொண்டிருக்கும் போது வெற்றைப் பயன்படுத்தி குழந்தையின் வாய்க்குள் காணப்படும் நுண்கிருமிகள் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் குழந்தையின் வாயயயில் இந்த இனிப்புப் பொருட்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு குருமிகளும் லாக்டிக் அமிலமும் அதிக அளவில் உற்பத்தியாகி விடுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு தோல் பாதுகாப்பளிக்கின்றதோ, அதேபோல் பற்களுக்கு டென்டைன் என்னும் ஒரு வகை எனாமல் பறர்களைப் பாதுகாக்கின்றபது. இந்த எனாமலை லாக்டிக் எமிலம் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விடுகினஅறது. பின்னர், கிருமிகள் பற்களில் அமிலத்தின் துணையுடன் துளையை ஏற்படுத்தி உட்சென்று பல்லை சொத்தையாக்கிவிடுகின்றது.