 அம்மையில் ஜெர்மனியில் பல்கலைக்கழக மாணவர்களுகாக ஒரு சுற்றுச் சூழல் மராமரிப்பு பயிலரங்கு நடத்தப்பட்டது. இந்த ஒரு வாரகால பயிலரங்கிற்கு 11 நாடுகளில் இருந்து 80 மாணவ மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டனர். இவர்களில் சீனாவைச் சேர்நத 6 மாணவர்களும் கலந்து கொண்டனர். ஐ.நா சுற்றுச் சூழல் திட்டமும், பேயர் என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து இந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் பயிலரங்கில் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் எதிர்வரும் வசந்த விழாவின் போது ச்யல்படுத்தப் போவதாக சீன மாணவ மாணவியர் கூறினர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புடணர்வையும் அறிவையும் சமூக மக்களிடையே பரப்பும்படி மாணவர்களைத் தூண்டுவதே இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம் என்று ஐ.நா சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் வட்டார இயக்குநர் சுரேந்தி விரேஸ்தா தெரிவித்தார்.

சீனாவின் சின்குவா, வடக்கு சியோத்துங், நான்கைய், புஃதான் மற்றும் கிழக்குச் சீன அரசியல் சட்டபல்கலை ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த பசுமைத் தூதவர்கள் தெரிவு ச்யெயப்பட்டனர். இவர்களில் வான் லேய் என்ற மாணவர் நான்கைய் பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். பறவைப் பாதுகாப்புக்காக இந்தச் சங்கம் துவக்கியுள்ள திட்டம் பற்றி பயிலரங்கில் இவர் விவரித்தார். அது குறித்து பெலிய அளவில் விவாதிக்கப்பட்டது. திபெத்திய மான் வகைகளின் பதிதாப நிலை பற்றி கேள்விப்பட்ட போது இவருக்கு சுற்றுச சூழல் பாதுகாப்பில் அக்கறை பிறத்தது. இவதிடைய ஆர்வத்துப் பினால் இரண்டாம் ஆண்டு கல்லூலில் படிப்பின் போது பசுமைக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழு ஒவ்வொரு வாரமும் குப்பை அன்றாதல் பரம் நடதல் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் பற்றிய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றது.

பொதுவாக கூச் சுபாதம் உடைய வான் லேய் ஒரு தடவை பெய்சிங்கிற்கு வந்து அமெரிக்க அற கொடை நிறுவனம் ஒன்றுடன் பேசி வாதாடி பறவைப் பாதுகாப்பு புதிதிட்டத்திற்கு நிதிபெற்றுச் சென்றார். அந்த வெற்றி இவருடைய வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இப்போது இவருடைய பசுமைப் பாதுகாப்புக் குழுவில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே தொடர்ந்து நீடிக்க மாட்டார்கள். ஒரு வேளை விலகிச் செல்லக் கூடும். அப்படியே அவர்கள் விலகிச் சென்றாலும் அவர்களின் உள்ளங்களிலே சுற்றுப்புறத்த தூயரரம் பற்றிய விழுப்புணர்வு பதிந்திருக்கும் அல்லவா அதுவே போதும் என்கிறார் வான் லேய்.
|