• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-05 16:24:26    
தூதாண்மை உறவுக்கு என்ன நிபந்தனை

cri

இரு நாடுகளுக்கிடையில் தூதாண்மை உறவை ஏற்படுத்துவது என்பது இரு நாடுகளும் சமம் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதாகும். இப்போது உலகில் பெரும்பாலான நாடுகளுக்கிடையில் இத்தகைய தூதாண்மை உறவு நிறுவுகின்றது.

இரு நாட்டு அரசாங்கங்கள் ஒன்றை ஒன்று ஏற்றுக் கொள்வது என்பது அவற்றுக்கிடையில் தூதாண்மை உறவை உருவாக்குவதற்கான முன் நிபந்தனையாகும். இந்த உறவை நிறுவுவது என்பது பரல்பரம் அங்கீகரிப்பது என்று பொருள்படுகின்றது. ஆனால் பரஸ்பரம் அங்கீகரிப்பதால் தூதாண்மை உறவை உருவாக்க வேண்டும் என்று பொருள்பட வில்லை. இரு நாட்டு அரசுகள் கலந்தாய்வு செய்த பின் உடனே அல்லது கூட்டாக தூதாண்மை உறவை ஏற்படுத்துவதாக அறிவிப்பது மிகவும் எளிதான வழி முறையாகும். சில சமயங்களில் இரு நாட்டு அரசுகளும் இப்படிச் செய்த பின் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தேவையில்லை.

சீன மக்கள் குடியரசின் நடுவண் அரசு நிறுவப்பட்ட பின் குறிப்பிட்ட நீண்ட காலத்திற்கு மற்ற நாடுகளால் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்து அவற்றுக்கிடையில் தூதாண்மை உறவு கூட நிறுவப்பட வில்லை. சர்வதேச சமூகத்தின் அங்கீராரத்தைப் பெறுவது என்பது நவசீனாவின் அப்போதைய முக்கிய கடமைகளில் ஒன்றாக மாறியது. பின், நவ சீனாவை அங்கீகரித்து அதனுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ள நாடுகள் மேன்மேலும் அதிகமாகிய பின் தைவான் பிரச்சினை தீவாரமாகிவிட்டது. சில மேலை நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவ விரும்பிய அதேவேளையில் தைவான் அதிகார வட்டாரத்துடனான அரசுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தை நிறுத்த விரும்ப வில்லை. இவற்றில் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய சில நாடுகள் கூட சில நலன்களை எதிர்பார்த்து தைவான் அதிகார வட்டாரத்துடன் தூதாண்மை உறவை நிறுவின.

சீனாவின் அரசுரிமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணிகாக்கும் வகையில் சீனா மற்ற நாடுகளுடன் தூதாண்மை உறவை நிறுவும் போது அல்லது இவ்வுறவை மீட்கும் போது எழுத்து மூல உடழிபடிக்கை செய்து பின்வரும் சில கோட்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனா எதிர் தரப்பை கோரியுள்ளது. அதாவது உலகில் ஒரேயொரு சீனாவை அங்கீகரிக்க வேண்டும். சீன மக்கள் குடியரசை சீனாவைப் பிரதிநிதிக்கும் ஒரேயொரு சட்டபூர்வ அரசாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தைவான் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். தூதாண்மை உறவை நிறுவிய பின் தைவானுடன் எந்த வடிவத்திலான அதிகார உறவையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை போன்ற நிபந்தனைகள் மேற்கூறிய அடிப்படை கோட்பாடாகும்.

இந்த எழுத்து மூல உடன்படிக்கை தன்மைகளை உடையது. எடுத்துக் காட்டாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் தூதாண்மை உறவு நிறவப்பட்ட போது இருதரப்பும் கையொப்பமிடாத ஆனால் ஒத்த அம்சம் கொண்ட தூதாண்மை உறவை நிறுவுதென்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன. சீனாவும் தோமிநிக்காவும் தூதாண்மை உறவை நிறுவும் போது இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இந்த உறவை நிறுவும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். உருப்படியான அம்சங்களில் தூதாண்மை உறவு நிறுவுவது பற்றிய அறிக்கையின் அம்சமம் ஒரே மாதிரியா இருப்பதில்லை.. புதிதாக தூதாண்மை உறவை நிறுவிய சில நாடுகளுக்கும் தைவான் அதிகார வட்டாரத்துக்குமிடையில் முன்பு இருந்த உறவுடன் தொடர்புடையது.

உதாரனமாக, சீனாவும் நோரு நாடும் தூதாண்மை உறவை நிறுவதென வெளியிட்ட அறிக்கையில் வேறுப் பாடு காணப்படுகின்றது. நோரு அரசு 2002ம் ஆண்டு ஜுலை திங்கள் 21ம் நாள் முதல் தைவானுடனான தூதாண்மை உறவை நிறுத்த வேண்டும், தைவானுடன் கையொப்பமிட்ட நாடுகளுக்கிடையிலான, அரசுகளுக்கிடையிலான அனைத்து உடன்படிக்களையும் ரத்து செய்ய வேண்டும். அத்துடன் ஒரு மாதத்துக்குள் ஒன்றுக்கொன்று, எதிரெதிர் தரப்பின் ஒருமை பிரதேசத்தில் தூதரகத்துக்கு அல்லது துணை நிலை தூதரகத்துக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். மற்ற அதிகார நிறுவனங்களையும் மூடிவிட வேண்டும். தூதரக பணியாளர்களையும் மற்ற அதிகாரிகளையும் வெளியேற்ற வேண்டும் என்ற அம்சங்கள் நோரு அரசுடன் சீனா கையொப்பமிட்ட அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆகவே ஒரு நாடு மற்ற நாட்டுடன் தூதாண்மை உறவை நிறுவும் போது தத்தம் கோட்பாட்டு கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.