• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-04 11:41:41    
ஆப்பிள் இனிப்பு

cri

இன்றைய நிகழ்ச்சியில், ஆப்பிள் இடம்பெறும் இனிப்பான வறுவல் பற்றி எடுத்துக்கூறுவேன். இந்த வறுவலுக்குத் தேவைப்படும் பொருட்கள் எளிதானவை. ஆனால், செய்முறை கொஞ்சம் கடினம். நான் நினைக்கின்றேன்.

முதலில், இதற்கு தேவையான பொருட்கள் கூறுகின்றேன்.

ஆப்பிள் 300 கிராம்

சர்க்கரை 100 கிராம்

ஸ்டார்ச் 50 கிராம்

முட்டை 2

நல்லெண்ணெய் 3 கிராம்

இந்த ஆப்பிள் சுத்தம் செய்யப்பட்டு விதைகளையும் காம்பையும் நீக்க வேண்டுமா?

கண்டிப்பாக. காம்பு, விதை ஆகியவற்றை நீக்கிய பின், ஆப்பிளை 1.5 சென்டி மீட்டர் அளவிலான துண்டுகளாக நறுக்கவும். இவற்றை ஸ்டார்ச்சுடன் நன்றாக கலக்க வேண்டும். பின்னர், முட்டை, எஞ்சிய ஸ்டார்ச் ஆகியவற்றைக் கலக்கவும். வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் எண்ணெய் ஊற்றவும். பிறகு, ஸ்டார்சுயுடன் நன்றாக கலந்த ஆப்பிள் துண்டுகளை இதில் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, நன்றாக வறுக்க வேண்டும்.

இதற்குப் பின் இவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். இப்படி செய்தால், வறுக்கப்பட்ட ஆப்பிள் துண்டுகளின் நிறம் ஒரே மாதிரியாக இருக்கும். தட்டில் கொஞ்சம் நல்லெண்ணெயை ஊற்றி வைக்கவும். வாணலியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 30 கிராம் குடிநீரையும், 100 கிராம் சர்க்கரையையும் வாணலியை வைத்து, மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின், கவனமாக இருக்க வேண்டும். அப்போது, அடுப்பிலுள்ள சர்க்கரை நீர் சூடாகி, bubble தோன்றும். இந்த bubble மேன்மேலும் சிறியதாகி, மஞ்சள் நிறமாகிவிடும். உடனடியாக, ஆப்பிள் துண்டுகளை வாணலியில் வைக்க வேண்டும் இவற்றை நன்றாக கலந்து பிறகு, தட்டில் வைக்கலாம்.

மேலும், சாப்பிடும் போது, அருகில் தண்ணீர் வைப்பது நல்லது. அடுப்பிலிருந்து ஆப்பில் துண்டுகளை எடுத்த பிறகு, தண்ணீரில் வைத்த பிறகு, சாப்பிடலாம்.

சர்க்கரை நீரை கூடுதலாக கொதிக்கவிடக் கூடாது. இல்லை என்றால் கசப்பான சுவை தான்.