சீனாவின் சுவான்சோ நகரில் நடைபெற்ற நான்கு நாட்டு மகளிர் கால்பந்து அழைப்புப் போட்டியின் இரண்டாம் சுற்றில் சீன அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியைத் தோற்கடித்தது. 28ஆம் நாள் நடைபெற்ற முதலாவது சுற்றில், சீன அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்தது.
சீனாவின் நான்கு ஆடவர் குறுந்தொலைவு ஓட்ட வீரர்கள் அமெரிக்காவின் தெக்செஸ் மாநிலத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அமெரிக்காவின் முன்னாள் புகழ்பெற்ற குறுந்தொலைவு ஓட்ட வீரர் மைக்கல் ஜான்சன் மற்றும் அவருடைய பயிற்சியாளரின் வழிகாட்டலில், சுமார் 6 திங்கள் காலம் தொழில்முறை பயிற்சி பெறுவார்கள்.
2005ஆம் ஆண்டு சீன-தென் கொரிய நட்சத்திர விளையாட்டு வீரர்களின் கூடைப்பந்து போட்டியின் இரண்டாம் ஆட்டம் சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்றது. சீன அணி 93-77 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்தது. 28ஆம் நாள் சியோல் நகரில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சீன அணி 82-85 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டது. இந்த இரண்டு அணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நட்சத்திர விளையாட்டு வீரர்கள்.

ஜனவரி 28ஆம் நாள் நடைபெற்ற உலக கோப்பைக்கான சுயேச்சைப் பாணி உறைபனிச் சறுக்கல் போட்டியின் அமெரிக்கச் சுற்றில் சீன வீராங்கனை லீ நி நா AERIALS எனும் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் பெற்றார். அவருடைய தொழியரான கோ சின் சின் நான்காம் இடம் பெற்றார். SALT LAKE நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இந்த விளையாட்டில் 5வது இடம் பெற்றிருந்த லீ நி நா மிகவும் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 191.16 புள்ளிகள் என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஜனவரி 29ஆம் நாள் போஸ்டனில் நடைபெற்ற உள்ளரங்க தடகளப் போட்டியின் மகளிர் பிரிவில் 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் எத்தியோப்பிய வீராங்கனை தி. திபாபா 14 நிமிடம் 32.93 வினாடியில் தூரத்தை ஒடிமுடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.
|