• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-08 20:53:20    
விளையாட்டுச் செய்திகள்

cri

2007 உலக சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டி ஜனவரி 30ஆம் நாள் ஷாங்கையில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2007ஆம் நாள் அக்டோபர் திங்களில் ஷாங்கை நகரில் நடைபெறும். ஆசியாவின் ஒரு வளரும் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

100வது ஆஸ்திரேலிய டென்னிஸ் ஒப்பன் போட்டியின் ஆடவருக்கான இறுதிப் போட்டி ஜனவரி 30ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிறைவடைந்தது. ரஷிய வீரர் மரட் சாபின் 3-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் லெய்ட்டன் ஹெவிட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். 29ஆம் நாள் நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் செரீனா. விலிம்ஸ் 2-1 என்ற செட் கணக்கில் லிண்ட்சே டேவன்போர்ட்டை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஜனவரி 29ஆம் நாள் மெல்பொர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸ் போட்டியின் இளைஞர் பிரிவில் ஆடவருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீனத் தைபெய் வீரர் யீ சூ ஹுவன், தென் கொரிய வீரர் கிம் சன் யுங் ஜோடி2-0 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் டொனால்ட், நெதர்லாந்து வீரர் தெ பாக்கர் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் சீனர் ஒருவர் இந்த பிரிவில் சாம்பியன் பெறுவது இது இரண்டாம் முறையாகும். கடந்த ஆண்டு சீன வீராங்கனை சு செங் நான் சீனத் தைபெய் வீரர் சன் யுங் ழனுடன் ஜோடிசேர்ந்து, இளைஞர் பிரிவின் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டு சீன-தென் கொரிய நட்சத்திர விளையாட்டு வீரர்களின் கூடைப்பந்து போட்டியின் இரண்டாம் ஆட்டம் சீனாவின் ஹார்பின் நகரில் நடைபெற்றது. சீன அணி 93-77 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்தது. 28ஆம் நாள் சியோல் நகரில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சீன அணி 82-85 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டது. இந்த இரண்டு அணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நட்சத்திர விளையாட்டு வீரர்கள்.

ஜனவரி திங்கள் 29ஆம் நாள் இத்தாலியில் நடைபெற்ற 28வது வினிஸ் நகர் கோப்பைக்கான ஆடவர் வாள் வீச்சு போட்டியின் ஏ பிரிவின் இறுதிப் போட்டியில் சீன வீரர் சு சுன் 5-15 என்ற புள்ளி கணக்கில் இத்தாலியின் ஒரு வீரரிடம் தோல்விக் கண்டு, இரண்டாம் இடம் பெற்றார். முன்னதாக, அவர், புகழ்பெற்ற இத்தாலி, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் வீரர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார்.

2005ஆம் ஆண்டு சர்வதேச உறைப்பனிச் சறுக்கல் அழைப்புப் போட்டி ஜனவரி 30ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. சீன வீராங்கனை லியூ ச்சியா யு மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார். பின்லாந்து, ஜப்பான், மற்றும் சீனாவைச் சேர்ந்த 50க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.