• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-04 10:39:39    
நேயர் நேரம்58

cri
சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் தூய ஒளி திருநாள் என்னும் தலைப்பில் வந்த செய்திகள் அருமை இதில் கல்லறைகள் பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் இறப்பதற்க்கு முன்பாகவே கல்லறைகளை பார்ப்பதும் அவற்றில் பல பொருட்களை வைத்து பராமபரிப்பதும் ஒரு புதுமையான செய்தியாக உள்ளது. காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் தீமைகளை பாண்டமங்கலம் தியாக ராஜாரன் அவர்கள் விளக்கி கூறியது அருமை இதன் மூலம் வரும் நோய்கள் மற்றும் அதன் செயல்முறைகள் அப்படியே தெளிவாக விளக்கி கூறியது. காலை உணவை தவிர்ப்பதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் இவைகள் வர வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியதும் இதை சரியான முறையில் செயல்படுத்தினால் இந்த இடையூறுகள் மற்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று கூறி விளக்கியதும் அருமை நன்றி என்று சேலம் நேயர் ப மோகன சுந்தரம் தமது டிசம்பர் திங்கள் கடிதங்களில் தெரிவித்தார். பேரிடர் மீட்புபணி என்ற செய்தி தொகுப்பு நிகழ்ச்சியில் சீனாவில் கடுமையான புயல் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை இந்த கட்டுரை மூலம் உணர முடிந்தது. பத்து ஆண்டுகளில் காண முடியாத பெரும் பாதிப்பை பெய்சிங் மாநகர் சந்தித்துள்ளதை அறிந்தேன். வெகுவிரைவில் இயல்பு வாழ்க்கை திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். 10 எக்டேர் வேளான் நிலங்கள் மழையினால் சேதமடைந்துள்ளதை எண்ணி மன வேதனை அடைந்தேன். நமது வானொலி செய்தி செய்திதொகுப்பின் மூலம் சீன நாட்டின் விவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது என்று இலவம்பாடி பி முத்து தமது கடந்த ஜூலை திங்களின் கடிதங்களில் எழுதியுள்ளார். சீன கதை நிகழிச்சியில் யானையின் பளுவால் எதையும் செய்யமுடியும் என்றாலும் அது பதவி ஆசையின்றி இருப்பதை கதை நிரூபித்தது அது போலவே ஒவ்வொரு வரும் தங்களால் எல்லாம் முடியும் என்ற தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டும் எண்பதை உணர்த்தியது பாகிஸ்தான் தலைமை அமைச்சரின் இந்திய பயணம் என்ற செய்தி தொகுப்பை சகோதரி மலர்விழி வாசிக்கக் கேட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள தலைமை அமைச்சர் என்பதையும் சந்திப்பின் போது ஏற்பட்ட உடன்படிக்கை பற்றியும் தெரிவாகக் கூறினீர்கள் என்று சின்னவளையம் பிபி பிரகாஷ் தமது கடந்த டிசம்பர் திங்களின் கடிதங்களில் தெரிவித்தார். கடந்த டிசம்பர் திங்கள் 9ம் நாள் அன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பால் குடிப்போர்க்கு புற்று நோய் வரும் அபாயம் அதிக அளவில் இருப்பதாக கூறி எங்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டீர்கள் இதனால் பாலை பார்த்தாமல் எங்களுக்கு பயமாக இருக்கிறது. தினமும் இரண்டு டம்ளர் பால் சாப்பிடுவோர்க்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறினீர்கள். ஆனால் இதை சுகாதார அமைப்புகள் மறுத்துள்ளன. சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சிக்சாங் மாநிலத்தில் உள்ள முதியோர் பாதுகாப்பு உதவி அமைப்பு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகளால் கைவிடப்படும் முதியோர் மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்கும் உதவி செய்து வருகிறது. இது மிகவும் வரவேற்கதக்க தகவல் ஆகும். அவர்கள் தங்கள் பொழுது போக்காக பேச்சு அறையை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைகின்றனர். இவ்வகை உதவிகளை செய்து வரும் அரசுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் என்று கோயமுத்தூர் பி மோகன் குமார் தமது கடிதங்களில் தெரிவித்தார்.