• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-06 00:06:55    
சிங்கியாங் உற்பத்திப்படை

cri

கோ பிங் பாலைவனத்தில் படைவீரர்கள் சாகுபடி செய்து பயிரிட்டனர். புல்கூட முளைக்காத பாலைவனத்தில் படைவீரர்கள் நீர்ச்சேமிக்க வழிபார்த்தனர். மரக் கன்றுகளை நட்டுச் செடிகளை வளர்த்தனர். குறுகிய பத்து ஆண்டுகாலத்தில், தெற்கு சிங்கியாங்கின் தாக்ராமகெங் பாலைவன விளிம்பு, வடக்கிலான குர்பாங்துங்ககுத் பாலைவன விளிம்பு, எல்லைப்புறப் பகுதி ஆகியவற்றில் எட்டு லட்சம் ஹேக்டர் தரிசு நிலத்தைப் பயன்படுத்தி சாகுபடி செய்து 7 லட்சம் டன் தானியத்தையும் இருபதாயிரம் டன் பருத்தியையும் முதலாவது தலைமுறை படைவீரர்கள், விளைவித்தனர். இதனால், உணவு, உடை பிரச்சினைக்குத் தீர்வு, உள்ளூர் கண்டதோடு, பொருளாதார நிர்மாணத்துக்கும் பெரும் ஆதரவும் உதவியும் அளித்தனர்.

இதற்குப் பின், ஹுனான், சாங் துங் முதலிய மாநிலங்களில் பெண் படையினர்களும் உற்பத்திப் படையில் சேர்க்கப்பட்டனர். ஹொ நன் ஹு பே, சியாங் சு மாநிலங்களையும் ஷாங்காய் மாநகரையும் சேர்ந்த லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும், பல்கலைக்கழக மற்றும் இடைநிலை சிறப்புத்தொழில் படிப்பு மாணவர்களும் இதில் தேர்ந்தனர். இரண்டாம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த அவர்களின் பங்களிப்பினால், சாகுபடி அணி விரிவடைந்தது. தவிரவும், முன்னேறிய சாகுபடி முறைகளையும், நவீன நாகரிகத்தையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர்.

கடந்த பல ஆண்டுகளில், மூன்று தலைமுறை படைவீரர்கள் சிங்கியாங்கின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான நீர்த்தேக்கங்களைக் கட்டினர். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான நீர்ப்பாசன வடிகால் அமைப்புகளையும் உருவாக்கினர். ஈராயிரத்துக்கும் அதிகமான கிணறுகளைத் தோண்டினர். லட்சக்கணக்கான ஹேக்டர் நிலங்களில் அவர்கள் மரம் நட்டு காடு வளர்த்தனர். இதன் விளைவாக, சிங்கியாங்கின் சில இடங்களில் பாலைவனம் பரவுவது பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டது.

வேளாண் துறையை வளர்ச்சியுறச்செய்யும் அதே வேளையில், வேளாண்மையின் துணைத் தொழிலான உற்பத்திப்பொருள் பதனீட்டுத் தொழிலையும் இவ்வுற்பத்திப் படை வளர்க்கத் துவங்கியது. இதனால் நவீனத் தொழிற்துறையும் வளர்ந்து வருகின்றது. மென்ரக தொழில், நெசவுத்தொழில் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட, இரும்புருக்கு, நிலக்கரி, கட்டிடப்பொருள், மின்சாரம், வேதியியல், இயந்திரம் உள்ளிட்ட தொழிற்துறை தொகுதிகள் படிப்படியாக உருவாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சீர்திருத்தம் மூலமாக பத்துக்கு மேலான கூட்டு நிறுவனங்கள் விற்பனைச் சந்தையில் நுழைந்துள்ளன. அவை சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் பெற்ற தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன. இன்று, Gobi பாலைவனத்தில், வட மேற்கு சீனாவிலுள்ள மிகப் பெரிய துணி ஆலைகளும் சாகிதத் தயாரிப்பு ஆலைகளும் காணப்படுகின்றன. முந்திரி மதுபானம், பழச்சாறு ஆகியவை தயாரிக்கப்பட்டு, தென்கிழக்காசிய சந்தையில் விற்பனைக்கு நுழைந்துள்ளன.

1  2  3