• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-07 00:02:30    
சீனாவின் தூய்மைகேடற்ற தேயிலை தொழில்

cri

தேயிலை நாடு என்று பாராட்டப்படும் சீனாவில், தேயிலை உற்பத்திக்கு 4000, 5000 ஆண்டு வரலாறு உள்ளது. தேனீர், வெகு காலத்துக்கு முன்பிருந்தே, சீன மக்கள் விரும்பி அருந்தும் பானமாகும். கடந்த சில ஆண்டுகளில், வாழ்க்கை நிலை உயர்ந்ததுடன், உடல் நலத்திலும் சீன மக்கள் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். பசுமையான, உடல் நல பாதுகாப்பு பானம் என்ற முறையில், தேனீர் கூடுதலான மக்களின் விருப்பத்தைப் பெற்றுள்ளது. தற்போது, சீனாவின் அனைத்து நகரங்களிலும் தேயிலை கடையும் தேனீர் அகமும் உள்ளன. எடுத்துக்காட்டாக, பெய்ஜிங்கில், தேயிலை வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. வூ யூ தாய் எனும் பழமை வாய்ந்த தேயிலை கடையில், அதன் அலுவலுக்குப் பொறுப்பான மேலாளர் செல்வி கோ லிங் செய்தியாளரிடம் கூறியதாவது—

"இந்த ஆண்டுகளில், தேயிலைக்கான தேவை இடைவிடாமல் அதிகரித்து வருகிறது. எங்கள் கடையின் விற்பனையிலிருந்து பார்தால், மக்கள் மேன்மேலும் அதிகத் தேயிலை பயன்படுத்துகின்றனர். எங்கள் விற்பனை அளவு ஆண்டுக்கு 10 விழுக்காடு என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது. தற்போது தேயிலையின் விற்பனை போக்கு சிறப்பாக இருக்கிறது" என்றார் அவர்.

தேனீர் அருந்த விரும்பும் சீன மக்கள், சீனாவின் தேயிலைத் தொழிலின் வளர்ச்சியை இடைவிடாமல் மேம்படுத்தி வருகின்றனர். புள்ளி விபரங்களின் படி, 2003ஆம் ஆண்டு வரை, 12 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் தேயிலை தோட்டங்கள் சீனாவில் உள்ளன. இந்த வகையில் உலகில் சீனா முதலிடம் வகிக்கிறது. தேயிலை உற்பத்தி அளவு ஆண்டுக்கு 7 லட்சம் டன்னாகும். தேயிலையின் மொத்த உற்பத்தி மதிப்பு 3400 கோடி யுவானை எட்டியுள்ளது.

தேனீரை சீன மக்கள் விரும்பி அருந்துகின்றனர். இது மட்டுமல்ல, பல்வகைப்பட்ட உணவு பொருட்கள், பானம் மற்றும் ஒப்பனை பொருட்களைக் கூட தயாரிப்பதற்கு தேயிலை பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தேயிலை கொண்டு முலாம் பழ விதைகளைப் பொறித்தல், காய்கறிகளை சமைத்தல், முகத்தை அழகுப்படுத்தல் போன்ற திட்டங்களை சில சிறப்பு கூட்டு நிறுவனங்கள் வகுத்த வருகின்றன. தேயிலையையும் இயற்கை உலர் மலருடனும் கலந்து, சுடு நீரில் ஊற வைத்த பின் தேயிலையும் மலரும் கரைந்து மக்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது.

1  2  3