• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-08 14:33:26    
சிகிச்சையில் பயந் மிக்க மெத்தடோன்

cri

போதை பொருள் உட்கொள்வோருக்காக மெத்தடோன் மருந்தை உட்கொள்ளும் சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையங்கள் சீனாவில் நிறுவப்பட்டுள்ளன. உலகிலுள்ள பல நாடுகள் மெத்தடோன் மருந்தை உட்கொள்வதை பயன்படுத்துவதன் மூலம் போதை பொருள் உட்கொள்வோரிடையே எய்ட்ஸ் நோய் பரவல் விகிதத்தை பயன்தரும் முறையில் குறைக்க முடிந்தது. தற்போது சீனாவில் எச் ஐவ் கிருமியால் நீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 8 லட்சத்து 40 ஆயிரமாகும். எய்ட்ஸ் நோய் பொது மக்களிடம் பரவ துவங்கியுள்ளது. ஒரே ஊசியை பலரும் பயன்படுத்துவதன் மூலம் போதை பொருளை உடம்பில் செலுத்துவது என்பது சீனாவில் எய்ட்ஸ் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாகும். இம்முறையைக் குறைத்து பின் எய்ட்ஸ் நோய் பரவலை தடுப்பது என்பது மெத்தடோன் மருந்து உட்கொள்ளும் முரையை மேற்கொள்வதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும் என்று சீன பெய்சிங் பல்கலைக்கழகத்தின் மருத்துவவியல் கல்லூரியின் பேராசிரியர் லீ ச்சு வெய் கருதுகிறார்.

மருத்துவ கண்ணோட்டத்திலிருந்து குறிப்பாக எய்ட்ஸ் நோய் தடுப்பு கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் முழு உலகமும் உண்மையை எதிர்நோக்கி போதை பொருள் உட்கொள்வோருக்கு ஒரு வகை மருந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அவர்கள் பொது ஊசியைக் கொண்டு போதை பொருள் உட்கொள்ளும் நடவடிக்கையை துண்டித்து அவர்களை எச் ஐவ கிருமி பிடிக்கப்படாமல் தடுப்பது என்பது அதன் நோக்கமாகும். மெத்தடோன் சிகிச்சை நிலையம் நிறுவது என்பது போதை பொருள் உட்கொள்வதால் தனிநபருக்கும் குடும்பத்தினருக்கும் சமூகத்துக்கும் விளைவிக்கும் தீஹ்கைக் குறைப்பதாகும் என்றார் அவர்.

தென்மேற்கு சீனாவின் யுவான் நான் மாநிலத்தைச் சேர்ந்த கொச்சியு நகரில் அமைந்துள்ள நெத்தடோன் மருத்துவ சிகிச்சை நிலையம் சீனாவின் முதலாவது மெத்தடோன் மருத்துவ சிகிச்சை நிலையமாகும். மின் சியாங் தொங் இந்த சிகிச்சை நிலையத்தின் ஒரு மருத்துவராவார். கடந்த ஆண்டும் ஏப்ரில் திங்கள் நோயாளிகளை வரவேற்றது முதல் இச்சிகிச்சை நிலையத்தின் பல்வேறு பணிகள் மிகவும் இயல்பான முறையில் இயங்குகின்றன. இதுவரை சுமார் 100 நோயாளிகள் அங்கு சென்று சிகிச்சை பெற்றார்கள் என்று அவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040