இப்பொழுது சீன மக்கள் வசந்த விழாவைக் கொண்டாடுவதில் பெரும் மாற்றும் ஏற்பட்டுள்ளது. ஒன்று கூடுவது, சுற்றுலா மேற்கொள்வது ஆகிய பாரம்பரிய நடவடிக்கைகள் தவிர, உடல் பயிற்சியும் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

2005ஆம் ஆண்டுக்கு, சர்வதேச விளையாட்டு மற்றும் உடல் பயிற்சி ஆண்டு என ஐ. நா பெயர் சூட்டியது. இதை முன்னிட்டு, சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகமும் நாடளவில் வசந்த விழா உடல் பயிற்சி நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. விழா நாட்களில், பல்வேறு இடங்கள், தத்தமது இடத்து சிறப்பியல்புக்கு இணங்க, மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பல்வகை உடல் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

குளிர்காலத்திலுள்ள தலைநகர் பெய்சிங்கிலும், வடக் கிழக்கு சீனாவின் ஹார்பின் நகரிலும் பனிச்சறுக்கல், உறைப்பனிச்சறுக்கல், நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். அதேவேளையில், வெப்பமான தென் சீன நகரங்களில் ஓட்டம் மற்றும் மலையேற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பெய்சிங் விமான மற்றும் விண்வெளிப் பயணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜின் பொங்பொங் கூறியதாவது விழா நாட்களில், நான் பெற்றோரையும் உற்றார் உறவினரையும் சென்று பார்ப்பது தவிர, பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த உறைப்பனிச்சறுக்கல் நடவடிக்கையிலும் கலந்துகொள்கின்றேன். அதேவேளையில், உள்ளரங்கத்தில், பூப்பந்து விளையாட்டிலும் கலந்துகொள்கின்றேன். தேர்வு இப்போது தான் முடிவடைந்தது. உடல் பயிற்சியில் ஈடுபடுவதன் முலம் மூளை கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். உடல் ஆரோக்கியமடையலாம். முக்கியமாக, பிறகு மேலும் சிறந்த நிலையில் படிப்பு மற்றும் பணியில் ஈடுபடலாம் என்றார் அவர்.

சில சமூக நடவடிக்கைகள் தவிர, பெய்சிங்கில் வேலையில் ஈடுபடுபவர்கள் சிலர், வசந்த விழா நாட்களில் உடற்பயிற்சி செய்ய விளையாட்டு மையத்துக்கு செல்கின்றனர். பெய்சிங்கிலுள்ள ஒரு விளையாட்டு மையத்தில், வியர்வை வடிந்த வண்ணம் உடல்பயிற்சி செய்யும் சிலரை எமது செய்தியாளர் கண்டார். நடனம், தைகொங்தௌ, பல்வகை பந்து விளையாட்டுகள் ஆகியவற்றில் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகிறார்கள்.
|