• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-17 21:53:28    
வசந்த விழாவில் உடல் பயிற்சி

cri

ஒரு தகவல் தொழில் நுட்ப கூட்டு நிறுவனத்தில் பணிபுரியும் சாங் சோ வசந்த விழாவுக்கு முன், ஒரு விளையாட்டு மையத்துக்கான நுழைவு அட்டையை வாங்கினார். விழா நாட்களில் தாமும் தமது சக பணியாளர்களும் உடற்பயிற்சி செய்ய அடிக்கடி இந்த மையத்துக்கு வருகின்றனர். இது ஏற்கனவே தமது வசந்த விழா வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறியுள்ளது என்று அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். உடல் நலத்துக்கு ஈராக எதுவும் இல்லை. உடல் பயிற்சி மூலம் தமது உடலும் மனமும் முழுமையாக ஓய்வு எடுக்கலாம் என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,  சாதாரண நாட்களில் எனக்கு வேலை அதிகம். உடற்பயிற்சி செய்ய நேரம் கிடையாது. எனவே வசந்த விழா நாட்களில் நான் சக பணியாளருடன் இணைந்து நன்றாக உடற்பயிற்சி செய்யலாம். இவ்வாறு நான் மேலும் உற்சாகத்துடன் பணியில் ஈடுபடலாம் என்றார் அவர்.

அனைவரும் உடல் பயிற்சி செய்வது பற்றிய திட்டத்தை சீன மக்கள் 1995ஆம் ஆண்டு, செயல்படுத்த துவங்கினர். சீன விளையாட்டு வீரர்கள் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தலைசிறந்த சாதனை பெற்றனர். அடுத்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2008 ஆம் ஆண்டில் பெய்சிங்கில் நடைபெறும். இவை, சீன மக்கள் உடல் பயிற்சியில் ஈடுபடுவதற்கு மேலும் ஊக்கம் தந்துள்ளன.

2004ஆம் ஆண்டுவரை, சீனாவில் மொத்தம் 1939 உடல் பயிற்சி பணித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1995ஆம் ஆண்டுமுதல் 2004ஆம் ஆண்டு வரை, சீன மக்களின் நபர்வாரி ஆயுள் காலம் 3.45 ஆண்டுகள் அதிகரித்து 72 வயதாக உயர்ந்துள்ளது. இது நடுத்தர வளர்ந்த நாட்டின் நிலைக்கு சமமாகும். இதில், அனைவரும் உடல்பயிற்சியில் ஈடுபடுவதென்ற திட்டமும், சுமுகமான வாழ்க்கை முறையும் முக்கிய பங்காற்றியுள்ளன.

முன்பு வசந்த விழா நாட்களில், கட்டுப்பாடற்ற முறையில் சாப்பிட்டு குடித்ததினால், விழாவுக்குப் பின் பலர் மருத்துவ மனைக்குச் சென்று நோய் பார்த்தனர். இருதய நோய் வாய்ப்பட்டோர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்தது. ஆனால், உடல் பயிற்சியில் கவனம் செலுத்திவருவதால், இந்த ஆண்டு மேற்கூறிய நிலைமை குறைந்துள்ளது.

பெய்சிங் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது மருத்துவ மனையின் மருத்துவர் லீ யாங் கூறியதாவது, இவ்வாண்டு வசந்த விழா நாட்களில் எமது மருத்துவ மனைக்கு வருபவர் ஓரளவு குறைந்துள்ளனர். உடல் நலத்தில் கவனம் செலுத்தி, உடல் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் மேலும் உணர்ந்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாகும் என்றார்.