1993ஆம் ஆண்டு முதல், சீனாவில் தனியார் தொழில் நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சியுற்று வருகின்றன. இந்த வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 28 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன அரசு அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2004ஆம் ஆண்டு முற்பாதி வரை, சீனாவில் தனியார் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை எட்டியது. வேலை செய்பவரின் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சமாகும். இதற்கிடையில், தனியார் தொழில் நிறுவனங்களின் அளவு தொடர்ந்து விரிவாகி வருகின்றது. இவற்றின் பொருளாதார ஆற்றலும் வலுப்பட்டு வருகின்றது. இவற்றில், நில பேரம், மின்னாற்றல் நிலக்கரி வாயு, நலவாழ்வு, கட்டிடக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
|