நிலநடுக்கம்---சில உண்மைகள்
cri


 
 அண்மையில் இந்துமாக் கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் லட்சக் கணக்கான உயிர்கள் பலியாயின. ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் பற்றிய சில தகவல்களை இன்றைய அறிவியல் நிகழ்ச்சியில் வழங்குகின்றார். டிசெம்பர் திங்கள் 26ம் நாள் இந்துமாக் கடலில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பால் லட்சக் கணக்கான உயிரிழப்பு ஏற்பட்டு மனித குலமே துயரக் கடலில் மூழ்கியது. இந்தக் கடல் கொந்தளிப்பு எதனால் ஏற்பட்டது?இந்தோனேசியாவில் சுமரா தீவுக்கு அருகில் நடுக் கடலில் கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் கடல் அலைகள் மேலெழும்பி கொந்தளிப்பு உண்டானது. ஆகவே இந்த அலை எழுச்சி ஒருவகை நில நடுக்கத்தின் வெளிப்பாடாகும். கடலுக்கு அடியில் ஏற்படுவது போன்று மலைப் பகுதியில் பூமியின் மிதவைத் தகசட்டுச் சலனம் ஏற்பட்டு நில நடுக்கம் உண்டாகும் போது நிலச் சரிவு நிகழ்கின்றது. பூமிக்கு அடியில் உள்ள நிலத் தகடுகள் ஒன்றோடு ஒன்று உயார்வதால் ஏற்படும் அதிர்ச்சியே இந்த வகை நில நடுக்கம். இன்னொரு வகை நில நடுக்கம் பூமியின் உட்பகுதிக்குள் எரிமலைச் சீற்றத்தால் ஏற்படுவது நில நடுக்கத்தின் போது ஏற்படும் அதிரலைகள் மூன்று வகைப்படும். ஒன்று முதல் நிலை அதிர்வலைகள். இவை நீனவாக்கில் பரவக் கூடியவை. இன்னொன்று அழுத்த அலைகள் அல்லது தள்ளும் அலைகள். இவை மணிக்கு 24000 கிலோமீட்டர் வேகத்தில் பாயக் கூடியது. இரண்டாம் நிலை அலைகள் நீரலைகள் போல செங்குத்தா அதிர்கின்றன. இவை ஒன்னொரு ஒன்று உரசுகின்றன. அதனால் இவற்றின் வேகம் மணிக்கு 16000 கிலோமீட்டர். இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும், எப்படி ஏப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. இதைக் கண்டறிந்து லொல்ல ஒரு கருவி இல்லை. ஆனால் நில நடுக்கம் ஏற்பட்டபிறகு அது எங்கே ஏற்பட்டது, எந்த அளவுக்கு ஏற்பட்டது என்பதை அளவிட ஒரு கருவி இருக்கின்றது. இதை ரிச்டர் அளவுகோல் என்கிறோம். இதை 1935ல் கண்டுபிடித்தவர் கார்லன் எப்பப்.ரிக்டர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. இதற்கு முன்னோடியாக சீஸ்மோகிராப் கருவி ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடித்தவர் ஒரு சீன விஞ்ஞானி. கி.பி. 132ம் ஆண்டில் சாங் ஹெங் என்பவர் கண்டுபிடித்த இந்தக் கருவி ஒரு தாழி அல்லது பானை போன்றது. அதன் எட்டுத் திசைகளிலும் வாய்பிளக்கும் திறப்புக்கள் உள்ளன. பூகம்பத்தின் போது அதில் இருந்து உமிழப்படும் குண்டு ஒன்று தாழியைச் சுற்றிலும் கீழே வைக்கப்பட்டுள்ள 8 வதழைகளின் ஏதேனும் ஒன்றின் வாயில் 'குபுக்'என்று விழும். அந்தத் தவனையின் திசை கோக்கியே நடுக்கம் ஏற்பட்டது என்று கண்டு கொள்ளலாம். இப்போது இந்தக் கருவி லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
|
|