கடந்த ஆண்டின் இறுதி வரை, சீன நாணய நிறுவனங்கள், மேற்கு பகுதிக்கு வழங்கிய கடன் தொகை 3 லட்சம் கோடி யுவானை நெருங்கியுள்ளது. இது, மேற்கு பகுதிப் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளது என்று சீன மத்திய வங்கியின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன், மேற்கு பகுதியின் வளர்ச்சிக்கான நெடுநோக்கு திட்டம் நடைமுறைக்கு வந்த பிற்கு, மேற்கு பகுதிப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான விரைவான சீரான வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, இப்பகுதியின் அடிப்படை வசதிக்களுக்கான கட்டுமானம், உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு தொடர்பாக, நாணய நிறுவனங்கள் இப்பகுதிக்கான கடன் ஆதரவை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி வழிகாட்டி வருவதாக இப்பொறுப்பாளர் தெரிவித்தார்.
|