திபெத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்
cri
கடந்த ஆண்டில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சீராக வளர்ச்சியுற்று வருகின்றது. ஆண்டு முழுவதிலும், மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 20 கோடி அமெரிக்க டாலரை முதன்முதலாக தாண்டியது. முந்தைய ஆண்டில் இருந்ததை விட சுமார் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் கண்காட்சிகளிலும் திபெத் ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டது. அன்னிய வணிகர்கள் பலர் திபெத்தில் முதலீடு செய்வதை ஈர்த்தது. கடந்த ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசம் சுமார் 2 கோடியே 70 லட்சம் அமெரிக்க டாலர் அன்னிய முதலீடு தொகையை பயன்படுத்தியது. முந்தைய ஆண்டில் இருந்ததை விட, இது சுமார் 480 விழுக்காடு அதிகரித்துள்ளது.
|
|