• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-16 20:23:30    
நேயர் நேரம்60

cri
இனி, எமது ஒலிபரப்பில் இடம்பெற்ற பிற நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்கள் இதோ.

--நான் உங்கள் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து விரும்பிக் கேட்டுகின்றேன். சீன உணவு அரங்கத்தில் கூறப்படும் சீன உணவுகளை எனது வீட்டில் நாங்கள் சமைத்து சுவைத்து மகிழ்கிறோம். நீங்கள் ஒலிபரப்பும் அறிவியல் உலகம் எனும் நிகழ்ச்சியினால் எனது அறிவு, மேலும் விரிவடைந்துள்ளது. உங்களது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்பதால் சீனாவைப் பற்றி நிறைய விடயங்களை என்னால் அறிய முடிந்துள்ளது என்கிறார் இலங்கை மட்டக்களப்பு, A.R.F.மபாஸா.

--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், துருப்பானின் வளர்ச்சி பற்றி, சொல்லும் போது, மேற்கு சீனாவில் அமைந்துள்ள பாலைவனம், ஒலி, மலை, பழமையான கட்டிடம், இயற்கை காட்சி கேட்பதற்கு நன்றாக இருந்தது என்கிறார் திருவானைகாவல், ஜீ.சக்ரபாணி.

--சீன மகளிர் நிகழ்ச்சியில், லாங்சோசாங் அம்மையாரின் சாதுர்யத்தையும், திறமையையும் நன்கு விளக்கினீர்கள். இந்த அம்மையார் நிர்வாகத்தில் எடுத்த முயற்சிகள் பாராட்டிற்குரியது. இவரது செயல் எங்களை வியக்க வைக்கும் வண்ணம் இருந்தது என்கிறார் மீனாட்சிபாளையம், கே.அருண்.

--சீன மகளிர் நிகழ்ச்சியில், திபெத்தின் குதிரை ஏற்ற பயிற்சியாளர் தாவோ சூமி அம்மையார் பற்றிய கட்டுரையைக் கேட்டேன். குதிரையேற்றத்தில் மகளிர் ஈடுபடுவதும், பயிற்சியாளராக இருப்பதும், திபெத்தியர்களுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் பெரும் வியப்பையோ ஏற்படுத்தியது என்கிறார், மணமேடு M.தேவராஜா.

--நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், உலகில் 110 கோடி பேர் புகைபிடிப்பதாகவும் ஆண்டுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு பலர் இறப்பதாக பல புள்ளி விவரங்களை அளித்தீர்கள். உலக நாடுகளுக்கு சீனா பல முன்னுதாரணங்களாக விளங்குகிறது. அந்த வரிசையில் சீனா புகைபிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கையும் வரவேற்கத்தக்கது என்கிறார் திருச்சி காஜாமலை, ஜீ.பிரபாகரன்.

--சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில், பேளுக்குறிச்சி கே.செந்தில் அவர்கள் வழங்கிய தகவல்களை கேட்டு பயன்பெற்றேன். இந்திய மாம்பழங்களை சீனாவில் இறக்குமதி செய்ய சீனா அனுமதி வழங்கியதால், இந்திய மாம்பழங்களை சீனர்கள் விரும்பி வாங்கி செல்வதை தெரிந்துகொள்ள முடிந்தது என்று, காசுக்காரன் பாளையம், D.நந்தகுமார்.

நேயர்நேரம் 23

சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சி, எப்பொழுதும் நேயர்களால் வரவேற்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்ட போது, சீனாவில் கண்கூட்டாக சென்றதை போன்றது என்று, பலர் கடிதத்தில் தெரிவித்தனர்.

--இந்நிகழ்ச்சி மூலம், கோடை கால மாளிகை பற்றி, விரிவான தகவல்களை இறிந்து கொண்டேன். இம்மாளிகை கட்டப்பட்ட ஆண்டு, அதன் சிறப்பு, அது எத்தனை முறை பாதிப்புக்குள்ளானது, எங்கும் புனரமைக்கப்பட்டது என்பது குறித்தும் நிகழ்ச்சியில், தெளிவாக கூறப்பட்டது என்கிறார் திருச்சி அண்ணாநகர் V.T.ரவிச்சந்திரன்.

--இதில், மலர்வழி கூறிய கோடை கால மாளிகை எனும் நிகழ்ச்சியை கேட்டேன். பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள கோடை கால மாளிகை, அரச குடும்பத்தினர் உருவாக்கியது. உலகின் பழமையான மாளிகை யாக கருதப்படுகிறது. ஒரு நாளில், 20000 மக்கள் வருகின்றனர் இந்த மாளிகையைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர் என்கிறார், செஞ்சி, கே.மதன்குமார்.

--இதில், சீன மக்களின் வாழ்கை முறையை பற்றி கேட்டேன். ஷாங்காய் நகரின் பாரம்பரிய இசை நாடகம் பற்றியும், சீன காய்கறி வகைகளை சுயமாக சமைத்து உண்ணலாம். ஏனெனில் எல்லா நாட்டு வகை காய்கறிகளும் மலிவாக கிடைக்கும், மேலும், மிங் வமிசம், சிங் வமிசம், கிராமம் பற்றியும் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் அருமையாக அறிந்து கொண்டேன் என்கிறார் ராமியம் பட்டி, எஸ்.பாரதி.

இனி, எமது ஒலிபரப்பு பற்றிய பல்வேறு கருத்துக்கள் இதோ.

--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், நூர்யான் குறித்த பல தகவல்களை அறிந்து கொண்டன். சீனாவின் மேற்கு பகுதியில் மரங்கள் நிறைந்த பள்ளமான காடாக இருந்த நூர்யான், இன்று செழிப்பு நிறைந்த திராட்சை பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் வருமானம் நிரைந்த பகுதியாகவும், பல சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் தளங்களை கொண்டதாகவும் உள்ளதை அறிந்து மனம் மகிழ்ந்தேன் என்கிறார் கைத்தறி நகர், J.D.மணிகண்டன்.

--வளமடையும் விவசாயக்குடும்பம் எனும் கட்டுரையைக் கேட்டேன். விவசாயி முன்னேற பல வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட விவசாயி வான்கேஷிங் அவர்களுக்கு, வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம் நேயர்களின் சார்ப்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறார்.

--இணையத்தில், சீனாவிலான புதிய முதலீட்டு வழிமுறைப் பற்றி பார்த்தேன். இதன் மூலம், தொழில் துறையை சில நிறுவனங்கள் எப்படி முன்னேற்றம் அடைய திட்டமிட்டுள்ளது என பேளுக்குறிச்சி, கே.செந்தில் எமது இணையத்தளத்தில் பார்த்து அறிந்தார்.

--வேளாண் துறையின் இறக்குமதி இருப்பதன் விளைவாக வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே கருத்து வேற்றுமை நிலவி வருவதை அறிய முடிகிறது என்கிறார் முனுகப்பட்டு, P.கண்ணன்சேகர்.

--சிறிது நாட்களுக்கு முன், என் நண்பர் சொன்னார், சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்பார் என்றார். நானும் அவர் சொன்னபடியே கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது. நேயர்களின் கேள்விகளுக்கு மிகவும் அருமையாக பதிலளித்தார் என்கிறார் கரியப்பட்டினம், V.R.புஷ்பராஜன்.

நேயர் நேரம் மற்றும் நேயர் கடிதம் நிகழ்ச்சி பற்றி

--நேயர் நேரம் நிகழ்ச்சி, 12 நிமிடமாக உயர்த்தப்பட்டுள்ளதை பெரிதும் வரவேற்கின்றேன். பாராட்டுக்கள். எனது கடிதம் படித்ததை கேட்டு மகிழ்ந்தேன் என்கிறார் விழுந்தமாவடி, R.மகேந்திரன்.

--நேயர் கடிதம் நிகழ்ச்சியில் நேயர்களின் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், தமிழ்பிரிவு முதலிடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நேயர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார் செந்தலை, N.S.பாலமுரளி.