• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-18 00:09:46    
DUN HUANG கல் குகை பற்றிய ஆய்வாளர்

cri

வடமேற்கு சீனாவின் பாலை வனப் பகுதியிலுள்ள DUN HUANG கல் குகை, மிகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த மரபுச்செல்வம், கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டறியப்பட்ட பின்பு, சுற்றுலா தலமாக மாறியது மட்டுமல்ல, பல நிபுணர்களையும் கவர்ந்துள்ளது. 66 வயதான சீன நிபுணர் FAN JIN SHI அம்மையார், இத்தகைய நிபுணர்களில் முக்கியமானவார். DUN HUANG குகை ஆய்வகத்தின் மூன்றாவது தலைவராக, இந்த அம்மையார், 41 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1963ம் ஆண்டு, 25 வதயான FAN JIN SHI, பெய்ஜிங் பல்கலைக்கழக்கத்தின் தொல்லியல் ஆய்வு துறையில் படிப்பை முடித்துக்கொண்ட பின், மனித நடமாட்டம் இல்லாத DUN HUANG பகுதிக்கு சென்றார். DUN HUANG கல் குகையிலுள்ள சிற்பங்களும் சுவர் ஓவியங்களும் மிகவும் அழகாக இருந்த போதிலும், சாதாரண தொழில் நுட்ப ஆய்வின் நிலைமையும், கடினமான அன்றாட வாழ்க்கையும் பற்றி, அவர் முன்கூட்டியே அறிய வில்லை. அப்போது, இங்கே மின்னாற்றல் இல்லை. குடி நீர் உப்பு நீராக இருந்தது. கோடைக்காலத்தில் மிகவும் வெப்பம். ஆனால், உறுதியான பொறுப்புடணர்வுடன், இந்த இன்னல்களை அவர் தாங்கினார். இதற்கு பிந்திய 40க்கு அதிகமான ஆண்டுகளில், DUN HUANGங்கை ஆராய்ந்து பாதுகாப்பது, அவர் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத வேலையாக மாறியுள்ளது. DUN HUANGங்கின் ஒவ்வொரு கல் குகையிலும், குகையின் பாதுகாப்பு மற்றும் ஆய்வு முன்னேற்றப் போக்கையும் அவர் நன்றாக புரிந்துகொண்டுள்ளார். DUN HUANG பற்றி, எவ்வளவு அறிந்துகொள்கின்றதோ அந்த அளவுக்கு அதன் எதிர்காலம் பற்றி கலவைப்படுகின்றார். அவர் கூறியதாவது:

பெளதீகவியல், வேதியியல், பொறியியல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தி, DUN HUANG கல் குகையின் ஆயுளை நீட்டிக்க முடியும். உண்மையில், மணல் காற்று, நில நடுக்கம், நீர்க்கசிவு முதலிய இயற்கைப் பாதிப்பால், சீரழியும் போக்கைத் தடுத்துநிறுத்த முடியாது. மனித குலம் இதைத் தடைப்படுத்த முடியாது என்றார் அவர்.

ஆவணப்படுத்துவது, DUN HUANG கல் குகைக்கான பாதுகாப்பு பணியில் முக்கிய வேலையாகும். முன்பு ஆவணங்கள், எழுதிவைக்கப்பட்டன. அடுத்து, சிறப்பான அளவீட்டு பணியாளர் இந்தப்பணியில் ஈடுபடுவதால், இப்போது ஆவண முறை மாறி வருகிறது. பிறகு, படம், ஒளி பதிவு உள்ளிட்ட முன்னேற்ற தொழில் நுட்ப வழிமுறைகள், ஆவணத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், எந்த வழிமுறையும், இந்த ஆவணத்தின் தகவலை எப்பொழுதும் பேணிக்காக்க முடியாது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், பெருவாரியான பயணிகள் வந்ததால், DUN HUANG கல் குகையின் பாதுகாப்பு பணியில், மேலும் பெரிய சிக்கல் ஏற்பட்டது என்று, FAN JIN SHI கூறியுள்ளார்.

2003ம் ஆண்டு, FAN JIN SHI, இலக்க முறை DUN HUANG கல் குகை எனும் திட்டத்தை முன்வைத்து, நடைமுறைப்படுத்தினார். இத்திட்டத்தின் படி, DUN HUANG கல் குகையிலுள்ள அரிய சின்னங்கள், இலக்க முறை ஒளிப்படம் என்ற வழிமுறையில் ஒளிபதிவு செய்யப்படுகிறது. பயணிகள் கல் குகைக்குள் நுழையத் தேவையில்லை. பயணிகள், இலக்க முறை திரையரங்கத்திற்கு போய்து, கணிணியை பயன்படுத்தி, குகையின் காட்சிகளையும் விவரத்தையும் முப்பரிமாணக்காட்சியாக தெளிவாக பார்த்து, DUN HUANG கின் பண்பாடு மற்றும் வரலாற்றை முழுமையாக புரிந்துகொள்ளலாம். இதனால், பயணிகள் கல் குகையில் தங்கும் நேரம் பெருமளவில் குறைக்கப்படும். இலக்க முறை DUN HUANG கல் குகை எனும் திட்டப்பணிக்கு, மொத்தம் 30 கோடி யுவான் முதலீடு மட்டுமல்ல, நீண்டகாலமும் தேவைப்படுத்துகிறது.

FAN JIN SHI கூறியதாவது:

இதற்காக, உயர் அறிவியல் தொழில் நுட்பத்தைக்கொண்ட கணிணியும், தகவல் தொழில் நுட்பமும் நல்ல நன்கு வழிமுறைகளாகும். DUN HUANG கல் குகை தொடர்புடைய தகவல்களை நாட்டுக்கு முழுமையாக நிலைநிறுத்த வேண்டும். இதுவே, உலகளவில் ஒரே ஒரு விலை உயர்ந்த மரபுச்செல்வம் ஆகும். எந்த வழிமுறையையும் பயன்படுத்தி, இதைப் பேணிக்காக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

DUN HUANG கல் குகை பற்றிய ஆய்வாளரும் நிர்வாக அதிகாரியுமாக, FAN JIN SHI அம்மையார் பெரும் சாதனை புரிந்துள்ளார். இதுவரை, DUN HUANG தொடர்புடைய புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரின் தலைமையில், DUN HUANG ஆய்வகத்தில், கல் குகைக்கான அறிவியல் பாதுகாப்பு வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்று சூழல் கண்காணிப்பு மற்றும் ஆய்வின் மூலம், கல் குகையின் சுற்று சூழலை அறிவியல் முறையில் மதிப்பிடுவது, சுவர் ஓவியத்தில் பழுது ஏற்பட்டுள்ள காரணத்தை விவாதித்து, பாதுகாப்பு பணிக்கு அடிப்படை மற்றும் அறிவியல் தரவுகளை வழங்குவது, கல் குகையில் சுற்றுலா பயணத்துக்கு கண்டிப்பான கட்டுப்பாடுகளை வகுத்து, மனிதர்களால் கல் குகை சீர்குலையாமல் தடுத்து நிறுத்துவது ஆகியவை, இந்த வழிமுறையில் இடம்பெற்றுள்ளன. இதற்காக, தாம் செய்வது, போதுமானது இல்லை. குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய சின்னங்களுக்காக, தாம் செய்வது மிகவும் சிறிய அளவிலான தொண்டு என்பதை, FAN JIN SHI உணர்ந்துகொண்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கோடிக்கணக்கான மக்களில், நானும் ஒருத்தி. ஒருவர், இந்த உலகில் வாழும் போது, சில சாதனைகள் செய்ய வேண்டும். இந்த இடத்தில் தங்கினால், பொறுப்பு ஏற்க வேண்டும். DUN HUANG கல் குகை, உலகளவில் உள்ள ஒரேஒரு மரபுச்செல்வம் ஆகும். நான் இங்கு 41 ஆண்டுகளாக தங்கியுள்ளேன். DUN HUANGஐ மிகவும் புரிந்துகொண்டுள்ளேன். இதைப் பேணிகாக்க வேண்டும் என்றார் அவர்.