சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 24 முக்கிய திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு இவ்வாண்டு 640 கோடி யுவான் முதலீடு செய்யும். வேளாண்மை, தொழிற்துறை, போக்குவரத்து, நலவாழ்வு மற்றும் நகராண்மை நிர்மாணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த 24 திட்டங்களுடன் தொடர்புடையவை. புல் வெளி கட்டுமானம், பாதுகாப்பு திட்டப் பணிகள், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் நிலத்தில் குடி நீர் தட்டுப்பாட்டைப் போக்குவது அங்குள்ள நெடுஞ்சாலை போடுவது மின்சார தொடரமைப்பை திருத்துவது இடைநிலை மற்றும் துவக்க பள்ளிக் கூடங்களை கட்டுவது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். இவை நிறைவேற்றப்பட்டதும் வாழ்க்கைச் சூழல் மேம்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மின்சார தொடரமைப்பை திருத்துவதால் 5 லட்சம் மக்களுக்கு குடி நீர் பிரச்சினை தீர்க்கப்படும். 4 லட்சம் மக்களுக்கு மின்சார பிரச்சினை தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|