• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-18 00:13:19    
நேயர் நேரம்61

cri
முதற்கண், கவர்ச்சிமிக்க நலவாழ்வு பாதுக்காப்பு நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களைக் காண்போம்.

--நலவாழ்வு பாதுக்காப்பு நிகழ்ச்சியில், சர்க்கரை நோய் பற்றி கூறக் கேட்டு பயன் பெற்றேன். நோய் வந்த பட்சத்தில், நாம் எப்படி எல்லாம் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி விரிவாக விளக்கியது என்கிறார் S.நாட்டாமங்கலம், A.மாதுராஜ்.

--இந்நிகழ்ச்சியில், பாண்டமங்கலம் எம்.தியாகராஜன் வழங்கிய கோபம் பற்றி கேட்டேன். இவர் தயாரிப்பு மூலம, நாம் கோபம் கொள்ளும் போது உற்பத்தியாகும் அமிலங்கள். இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலில் பல பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என அறிந்தேன் என்கிறார், ராமியம்பட்டி எஸ்.பாரதி.

--இதில், சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புச் சுவை காரணமாக பசி உணர்வு அடிக்கடி தோன்றும். கோழிக்கறி சிறிது சிறிதாக எடுத்து நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின், பாகற்காய், அவரைக்காய் இரண்டையும் தேவையான அளவு எடுத்து சிறிய துண்டு துண்டாத வெட்டி வைத்து கோழிகளியை இதனுடன் கலந்து சமைத்த காய்கறி, என்னை போன்ற சர்க்கரை நோயாளிகளுக்கு பயன் விளையும் என்று, தென்னம்பட்டி செளந்திரராசு.

--இப்பகுதியில், அமெரிக்காவில் உடற்பயிற்சி சாதனம் பற்றி மேலும் பல தகவல் எடுத்து கூறினீர்கள். அருமையாக இருந்தது தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார் தி.கலையரசி அவர்களுக்கு நன்றிகள் என்று கண்டமங்கலம் ஏ.முஜீபுர் ரஹ்மான்.

எமது ஒலிபரப்பில், மக்கள் சீனம் நிகழ்ச்சி எப்பொழுதும் பல நேயர்களைக் கவர்ந்து வருகிறது.

--சர்க்கரை நோய் பற்றிய சில தகவல்களைக் கேட்டேன். தற்போது மனித இனம் கண்டு அஞ்சும் நோய்களில், சர்க்கரை வியாதி என அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்றாகிவிட்டது. யாருக்கும், எந்த நேயருக்கும் இந்த நோய் ஏற்படலாம் என்ற நிலை. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சர்க்கரை வியாதி பற்றிய செய்திகளை விரிவான முறையில் தெரிவித்ததற்கு என் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன் என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் S.செல்வம்.

மக்கள் சீனம் நிகழ்ச்சியில், நவ சீனாவின் பொருளாதார கட்டுமானம் பற்றி கேட்டறிக்கலாம்.

--மக்கள் சீனம் நிகழ்ச்சியில், துர்பான் பொருளாதார வளர்ச்சி மேற்கு சீனாவில் பாலைவனம், பழைய நகரங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கும் இணையாக உள்ளன. ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் துர்பானுக்கு வருகை புரிகின்றன என்கிறார், செஞ்சி கே.மதன்குமார்.

--இந்த நிகழ்ச்சியில், புதுமகம் வான்மதி அவர்களின் குரல் தெளிவாகவும், நன்கு புரியும் படியாகவும் உள்ளது. 2000ம் ஆண்டில் மணத்தாற்று வீசியதால் தடுப்பாதிப்பிற்குள்ளான பெய்ஜிங் சுற்று சூழல் தற்போது நல்ல நிலைமையில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது என்கிறார், செந்தலை N.S.பாரமுரளி.

--குவாங் சாவ் பொருட்காட்சி பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மைக்ரோவன் எனும் மின் சமையல் பொருட்களை உலகளவில் சீனாவின் உற்பத்தி மிக அதிக அளவு 33.7 சகவிதத்தை அது தொட்டுள்ளது என்றும் அறிந்துகொண்டேன் என்கிறார், ராசிபுரம் R.M.மோகன்.

--சீனாவில் காடு வளர்ப்பு பற்றிய மக்கள் சீனம் நிகழ்ச்சியில், அறிய முடிந்தது. சீனாவில் 5560 கோடி யுவான் செலவில் 4 லட்சம் சதுர கிலோமீட்டரில் மரம் வளர்க்கப்பட்டு வருவதும், 1970ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 20 விழுக்காடு காடுகளின் பரப்பு உயர்ந்துள்ளதையும் அறிந்தேன், மகிழ்ந்தேன். சீன அரசு, காடு வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிவருவது பாராட்டத்தக்கது என்று, காசுக்காரன் பாளையம், D.நந்தகுமார் தெரிவித்தார்.

--இந்த நிகழ்ச்சி மிகவும் சுவையானது. விவசாயிகளின் செந்நிற வங்கி என்ன என்பதையும், மிளகாய் பயிரிடும் 13 லட்சம் விவசாயிகள் செந்நிற மிளகாய் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலை மாறி செழிப்பு அடைந்து இருப்பதும். ஆண்டுக்கு 10 லட்சம் கிலோ வியாபாரம் கொடுக்கும் செந்நிற தங்கம் இன்று சீன மிளகாய் இணையதளத்திலும் பவனி வருவது வாழத்தும் வண்ணம் உள்ளது என்கிறார், புதுவை மாநிலம் ஜீ.ராஜகோபால்.