எல்லை பிரதேசங்களின் வளர்ச்சித் திட்டம்
cri
எல்லைப்புற மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் எல்லை பிரதேசங்களை வளர்க்கும் திட்டப்பணியை யுன்னான் மாநிலம் செயல்படுத்தும். அடிப்படை வசதிகளையும் சிறப்பு தொழில்களையும் உருவாக்கி, எல்லை மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஏழையான மக்களின் உணவு உடை பிரச்சினையைத் தீர்க்க பாடுபடும் என்று யுன்னான் மாநில அரசு இன்று அறிவித்தது, தென் கிழக்காசியாவின் வியட்நாம், லாவோஸ், மியன்மார் ஆகிய மூன்று நாடுகளை யுன்னான் மாநிலம் ஒட்டியமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் 25 எல்லைப்புற மாவட்டங்களும் நகரங்களும் இருக்கின்றன. இதன் மக்கள் தொகை 58 லட்சமாகும். வரலாறு, இயற்கை ஆகியவற்றின் காரணமாக, தற்போது இம்மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டங்கள் மற்றும் நகரங்களின் சமூக பொருளாதார வளர்ச்சி பின்தங்கியுள்ளது.
|
|